உருண்டை கலியா

தேதி: September 21, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீமா (அரைத்த இறைச்சி) - கால் கிலோ
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - சிறிது
கிராம்பு - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் கீற்று - 3 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க


 

மிக்ஸியில் கீமாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அரைத்து எடுத்து வைக்கவும்.
பிறகு மிக்ஸியில் தேங்காய் கீற்றை அரைத்து அதை கீமா கலவையுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெயை சூடாக்கி கீமா கலவையை சிறிது சிறிதாக எடுத்து இப்படி தட்டையாக தட்டி இரண்டு பக்கமும் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
சுவையான உருண்டை கலியா தயார். இது சாம்பார், ரச சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். இதே முறையில் இறாலிலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ரஸியா, அஸ்ஸலாமு அலைக்கும்,,,இதைத்தான் எங்க ஊர்ல கோலா உருண்டைன்னு சொல்லுவாங்க..ரொம்ப நல்லா இருக்கு ... வாழ்த்துக்கள்

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

nice recipe

கலியா சூப்பர்....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப சூப்பர். நல்ல ஸ்டாட்டர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் பதிவிற்கு நன்றி ஷபீ,அப்படியா,இதை எங்க ஊரில் அதிகமாக இறாலில்தான் செய்வார்கள்,நல்ல டேஸ்டாக இருக்கும்.

Eat healthy

ரொம்ப நன்றி பாராட்டுக்கு.

Eat healthy

ரொம்ப நாளா ஆளே காணோம் வனி?! என்ன ஆச்சு?எப்படி இருக்கீங்க & எங்க இருக்கீங்க?நன்றிபா

Eat healthy

ஹாய் ரஸ்யா இன்று உங்க உருண்டை கலியா செய்தேன் நன்றாக இருந்தது

நன்றி நஸ்ரின்,சுவை நல்லா இருந்ததா?உங்களுக்கு பிடித்ததா?

Eat healthy