கீஷ் (Quiche)

தேதி: September 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (3 votes)

 

மாவு தயாரிக்க:
மைதா மாவு - 3 கப்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பால் - கால் கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி
சீனி - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு தேக்கரண்டி
வேக வைக்க:
எலும்பில்லாத கோழி - 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
கேரட், பச்சை பட்டாணி, குடை மிளகாய் - அரை கப்
ப்ரஷ் க்ரீம் - 2 மேசைக்கரண்டி
துருவிய சீஸ் - 75 கிராம்
முட்டை - 3
மல்லித் தழை - சிறிது


 

மைதா மாவுடன் வெண்ணெயை உருக்கி ஊற்றி, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, பால் மற்றும் சீனி சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கோழி, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பச்சை பட்டாணி, குடை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வதக்கி, கோழிக் கலவையில் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி துருவிய சீஸ் மற்றும் ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை உருட்டி சப்பாத்தி போல் தயார் செய்து, வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் வைத்து 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 5 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.
அதன்மேல் கோழிக் கலவையை பரவலாக ஊற்றி 200 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சுவையான கீஷ் ரெடி.
சூடாகத் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

கீஷ்ஷில் மிளகாய் தூள், மசாலா தூள் சேர்ப்பதில்லை. நான் சற்று காரசாரமாக இருக்கவேண்டுமென சிறிது சேர்த்துள்ளேன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா கீஷ் சூப்பரா இருக்கு.... கடைசி ப்ளேட் எனக்கு.... இதை இரவு டிபனா சாப்பிடலாமா அல்லது ஸ்நாக்காகவா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நல்லா செய்திருக்கீங்க... பீசா போல தான் சுவை இருக்குமா? நான் இதுவரை சாப்பிட்ட நினைவு இல்லை. அதான் கேட்டேன். ட்ரை பண்ணறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை உடனே வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி உமா.இதை இரவு டிபனா சாப்பிடலாம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி வனி.இதன் சுவை பீசா போல இருக்காது,அதிகமான வித்தியாசம் உண்டு,இங்கு இது பிரபலம்.நம் இஷ்டத்திர்க்கு உருளை,மட்டன் என்று விரும்பியதை செர்த்து செய்யலாம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அக்கா ஐந்து பேர் சாப்பிட எந்த அளவில் செய்யனும்? மாவு அளக்கும்போது குவித்து அளக்கனுமா? மாவை பிசைந்து ஊற வைக்கனுமா? ப்ரஷ் க்றீமுக்கு பதில் வேறு எதுவும் சேர்க்கலாமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முஹ்சினா கீஷ் ரொம்ப நல்லா இருக்கு,நான் வேறுவிதமா செய்வேன்,ஆனால் மாவு வாங்கிதான் செய்வேன்,உங்க குறிப்புபடி செய்து பார்கிறேன்,கலக்குறீங்க போங்க

Eat healthy

இந்த அளவு 2 பேர் புல்லா சாப்பிடலாம்.மாவை குவித்து எடுக்க தேவைஇல்லை.பிரஷ் கிரீம் சேர்க்கமலும் செய்யலாம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி அக்கா. மாவை பிசைந்து ஊற வைக்கனுமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஆமாம் ரஸியா,பேஸ்ட்டிரி சீட்டிலும் செய்யலாம்.அது கிரிஸ்ப்பாக இருக்கும்,இது சாப்ட்டாக இருக்கும்.கூட ஒரு ஹாட் சூப் செய்ங்க,சூப்பர் காமினேசன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மாவை பிசந்த்து விட்டு,பூரணம் செய்யும் நேரமே போதுமானது.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி அக்கா.... சனிக்கிழமை செய்யலான்னு இருக்கேன். செய்துட்டு பதிவு போடுறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அக்கா கீஷ் செய்து சாப்டாச்சு... சூப்பரா இருந்தது. அருமையான குறிப்பு தந்த முசி அக்காவுக்கு ஒரு ஓ.....ஓ....ஓ......

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு,நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

ஆஹா பார்க்கவே கலர்ஃபுல்லா அட்டகாசமா இருக்கே சூப்பர்ங்க அப்படியே பார்சல் பன்னிடுங்க சாப்டுக்கரேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி,சுவர்ணா.அப்படியே எடுத்துகுங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.