பச்சைப்பட்டாணி மசாலா

தேதி: November 3, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சைப்பட்டாணி - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - மூன்று
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - இரண்டு பற்கள்
பச்சைமிளகாய் - இரண்டு
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரைதேக்கரண்டி
சீரகம் - அரைதேக்கரண்டி
சர்க்கரை - அரைதேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி


 

பச்சைபட்டாணியை கழுவி எடுத்து வைக்கவும்.
இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி அல்லது துருவி வைக்கவும்.
இரண்டு தக்காளியை நன்கு கரைத்தும் ஒரு தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கியும் வைக்கவும்.
பச்சைமிளகாயை கீறி வைக்கவும்.
சற்று குழிவான சட்டியில் எண்ணெயை காய வைத்து சோம்பு, சீரகத்தைப் போட்டு வறுக்கவும். பிறகு வெங்காயம் இஞ்சி பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி கரைசலை ஊற்றி எல்லாவற்றையும் சேர்த்து மையாக வதக்கவும்.
பிறகு உப்புத்தூள் மற்றும் எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கி பட்டாணியைக் கொட்டி நன்கு கிளறவும்.
பிறகு ஒரு கோப்பை தண்ணீரைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
பட்டாணி ஐந்து நிமிடத்தில் வெந்து விடும். பிறகு நறுக்கிய தக்காளி, கீறிய பச்சைமிளகாய் மற்றும் சர்க்கரையைக் போட்டு நன்கு கலக்கி மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு பச்சை மிளகாயின் பச்சை வாசனையுடன் கொத்தமல்லியைதூவி இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வணக்கம்.

நான் இந்த குறிப்பில் சக்கரை சேர்த்திருப்பதை பார்த்தேன்.
சக்கரை ஏன் சேர்க்கிறீர்கள்?

அன்புடன்
அம்மு.

ரொம்ப நன்றாக இருந்தது.

வணக்கம் அம்மு உங்க பின்னூட்டத்தை பார்க்க எனக்கு ஒரு வருடத்திற்க்கும் மேல் ஆகி விட்டது அதற்காக வருந்துகின்றேன். நான் சாதாரணமாக சைவ உணவு மசாலாக்களின் சுவையைக் கூட்ட சிறிது சர்க்கரைச் சேர்த்துக் கொள்வேன் மற்றபடி அது கட்டாயம் கிடையாது சரீங்களா, நன்றி.

அன்பு விஜி நீங்களும் இந்த பட்டாணி மசாலாவைச் செய்து பின்னூட்டம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.