சேப்பங்கிழங்கு சுக்கா

தேதி: September 30, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

சேப்பங்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - ஒன்று
சாம்பார் பொடி - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை ஒன்று போல் நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும்.
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தீயை குறைத்து வைத்து உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு வேக வைத்து நறுக்கிய சேப்பங்கிழங்கை சேர்த்து கிழங்குடன் மசாலா சேரும்படி நன்கு பிரட்டிவிடவும். 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு முறை பிரட்டிவிட்டு இறக்கவும்.
சுவையான சேப்பங்கிழங்கு சுக்கா தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா சுக்கா சூப்பரா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வனீ... சுக்கா சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்... சீக்கிரம் செய்துடறேன். நான் உருளை கிழங்குல செய்வேன். ஆனா சேப்பங்கிழங்குல செய்தது இல்லை.. செய்துடுவோம்

Be simple be sample

வனி சேப்பங்கிழங்கு அப்படியே எனக்குதான் ரொம்ப பிடிக்கும் :) செய்முறை நல்லாருக்கு செய்துபாத்துடுவோம் .

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் அக்கா உங்க சேப்பங்கிழங்கு சுக்கா செய்தேன் நான் முதல் முறையா சாப்பிட்டேன் ரொம்ப அருமையா இருந்தது நன்றி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

;) நீங்க என்னை அக்கான்னு கூப்பிட்டு போட்ட கடைசி பதிவுன்னு நினைக்கிறேன். ஹைய்யா... ஜாலி ஜாலி... மிக்க நன்றி வதனி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் இதுவரை உருளையில் தான் செய்தேன், இப்ப தான் கொஞ்ச நாளா இதுல செய்யறேன். செய்து பாருங்க, பிடிக்கும்னு நம்பறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி சுவா, அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) முதல்ல செய்து சொன்னது மிகுந்த மகிழ்ச்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சேப்பக்கிழங்கில் முதல் முறையாக சுக்கா செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது.

செய்து பார்த்து கருத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா