பூசணிக்காய் கூட்டு

தேதி: November 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சதுரமாக நறுக்கிய பூசணிக்காய் - 2 கப்
துருவிய தேங்காய் - கால் கப்
சீரகம் - கால் தேக்கரண்டி
பொடித்த வெல்லம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேங்காயையும், சீரகத்தையும் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பூசணிக்காய், சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
வெந்த பின் உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், அரைத்தவிழுது, வெல்லம் போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கூட்டில் சேர்க்கவும்.


இதற்கு நன்கு பழுத்த மஞ்சள் பூசணிக்காயை உபயோகப்படுத்தவும்.

மேலும் சில குறிப்புகள்