வெண்டைக்காய் பச்சடி

தேதி: October 4, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (7 votes)

 

வெண்டைக்காய் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
மல்லித் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய் விழுது - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
சீனி - அரை தேக்கரண்டி
உப்பு - சிறிது
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
வெங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - ஒன்று


 

வெண்டைக்காயை கழுவி துடைத்துவிட்டு தலை மற்றும் வால் பகுதியை நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெண்டைக்காயைப் பொரித்தெடுக்கவும்.
அரை டம்ளர் தண்ணீரில் புளியைக் கரைத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெண்டைக்காய் பொரித்த எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் அதில் புளி, மசாலாக் கலவையை ஊற்றி, வெண்டைக்காயைச் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
வெண்டைக்காய் வெந்து, மசாலாக் கலவை கெட்டியானதும் சீனி சேர்த்து சிறிது நேரம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
புளிப்பு, இனிப்பு மற்றும் காரச் சுவையுடன் வெண்டைக்காய் பச்சடி தயார். இதை பிரியாணி, நெய் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பச்சடி நல்லாருக்கு ரஸி.... இலகுவாவும் இருக்கு... ட்ரை பண்ணிட்டு சொல்றேன்....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நல்லா இருக்கு... குறிப்பும், படங்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பச்சடி சூப்பர்,நான் இதை சற்று வேறு விதமாக செய்வேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும் ரஸியா சிஸ்டர்... படங்கள் அருமை.. நாங்களும் இது போல் தான் பச்சடி செய்வோம். ஒரே ஒரு வித்தியாசம் தான்.. நீங்க வெண்டைக்காயை முழுசா போட்டிருக்கீங்க.. நாங்க இரண்டு அல்லது மூன்று துண்டுகள் போட்டு செய்வோம். வீட்டில் விஷேஷம் என்றால் வெண்டைக்காய் (அ) கத்தரிக்காய் பச்சடி கட்டாயம் இருக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

தாமத பதிலுக்கு சாரி தோழிகளே,நன்றி உமா,செய்து பாருங்க

Eat healthy

நன்றி வனிதா,இந்த பச்சடி எங்க ஊர் பக்கம் ஸ்பெஷல்,விசேஷங்களுக்கு செய்வார்கள்

Eat healthy

எப்படி இருகீங்க?அப்படியா!உங்க முறையையும் போட்டு விடுங்க,செய்து பார்க்கிறோம்

Eat healthy

ரொம்ப நன்றிபா;முழுசாதான் அம்மா போடுவாங்க,அதான் நானும் அப்படியே செய்வேன்,பிரியாணிக்கு வெண்டைகாய் அல்லது கத்தரிகாய் பச்சடி நல்லா இருக்கும்

Eat healthy