டபுள் ஸ்டஃப்டு கேக்

தேதி: October 9, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

மாவு தயாரிக்க:
மைதா மாவு - ஒரு கப்
பால் - கால் கப்
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு
ஸ்டஃப்பிங்கிற்கு:
வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று
வேக வைத்த சோளம் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
கடுகு
கறிவேப்பிலை
உப்பு


 

உருளைக்கிழங்கை தோலுரித்து வைக்கவும். சோளத்தை உதிர்த்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் தூள் வகைகள், வேக வைத்த உருளைக்கிழங்கு, சோளம், கொத்தமல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
மாவு தயாரிக்கச் கொடுத்துள்ளவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வெண்ணெய் தடவிய கேக் ட்ரேயில் 2 மேசைக்கரண்டி மாவை ஊற்றவும். (இந்த அளவு மாவிற்கு சிறிய அளவு கேக் ட்ரே போதுமானது).
மாவின் மேல் 2 மேசைக்கரண்டி ஸ்டஃப்பிங் வைத்து மேலே சிறிது மாவை ஊற்றவும். அதன்மீது சிறிது ஸ்டஃப்பிங் வைத்து கடைசியாக மாவு ஊற்றி மூடி 200 டிகிரியில் முற்சூடு செய்த அவனில் வைத்து 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சுவையான, காரசாரமான டபுள் ஸ்டஃப்டு கேக் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான குறிப்பு அக்கா. விருப்பப் பட்டியலில் சேர்த்துட்டேன். கண்டிப்பா டிரை பண்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரொம்ப நல்லா இருக்கு. நான் இது போல மஃபின் பண்ணது உண்டு. கேக் சூப்பர். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் & குழுவினருக்கு நன்றி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி,செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

எனக்கு பிடிச்சிருக்கு.தங்ச்ஸ்

ரொம்ப நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.