காலிஃப்ளவர் வறுவல்

தேதி: November 6, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

காலிஃப்ளவர் - அரைகிலோ அளவு
வெங்காயம் - இரண்டு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - இரண்டு பற்கள்
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
பச்சைமிளகாய் - இரண்டு
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
எண்ணெய் - கால் கோப்பை
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி


 

காலிஃப்ளவரை சற்று பெரிய பூக்களாக நறுக்கிக் கழுவி கொள்ளவும். இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
வாயகன்ற சட்டியில் எண்ணெயை காய வைத்து கடுகு, சீரகத்தை போட்டு வெடிக்க விடவும்.
பிறகு வெங்காயத்தைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பச்சைமிளகாயைப் போட்டு நன்கு வதக்கி பூக்களை போட்டு நன்கு கிளறி விடவும்.
பிறகு உப்புத்தூளுடன் மிளகாய்தூள், மஞ்சள்தூளையும் சேர்த்து தூவி நன்கு கிளறி விடவும்.
அடுப்பின் அனலை குறைத்து வைத்து தண்ணீர் ஊற்றாமல் மூடிப் போட்டு வேகவிடவும். பத்து நிமிடம் கழித்து நன்கு கிளறி விடவும்.
பூக்கள் முக்கால் பங்கு வெந்திருந்தால் போதுமானது. பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி விட்டு இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள சகோதரி மனோகரிக்கு!
நல்லா இருக்கீங்களா?ரொம்ப நாலாச்சு பேசி!மேலும் உங்களுடைய காளிஃபிளவர் வருவல் செய்து பார்த்தேன் ரொம்ப நல்லா வந்தது மிக்க நன்றி உங்களுக்கு!மேலும் நான் இதை செய்து பார்த்து 2 வாரம் இருக்கும் என்னால் உடன் பின்னூட்டம் குடுக்க முடியவில்லை,மேலும் குறிப்பு குடுப்பவர்கலுக்கு இதை போல் பின்னூட்டங்கள் ஒரு உற்ச்சாகத்தை தரும் அதனால் லேட்டானாலும் பரவாயில்லை என்று இப்பொழுது தெரிவிக்கிரேன்!மேலும் முன்பு எனது ஃபிரெஞ்சு படிப்பு எந்தளவில் இருப்பதாக வினவி இருந்தீர்கள் இன்னும் முடியவில்லை இன்னும் 2 வாரம் இருக்கிரது இந்த கிராமர் தான் என்னை பாடாப்படுத்துகிறது!உங்கள் நாட்டிலும் ஃபிரெஞ்சும் இருக்கிறது தானே?நடைமுறைய்யில் ஃபிரெஞ்சு பேசுகிறார்களா அங்கு? மற்றவைக்கு பின்பு

டியர் ரஸியா எப்படி இருக்கீங்க?காலிப்பிளவர் குறிப்பை செய்துபார்த்து பின்னூட்டமும் அனுப்பியதற்கு மிக்க நன்றி.நீண்ட நாட்களுக்கு பிறகு தான் உங்கள் பதிவிற்கு பதில் எழுத முடிந்தது. இங்கு நான் வசிக்கும் பகுதியில் ஆங்கிலம் தான் நடைமுறையில் இருக்கின்றது. ஆனால் கியூபெக் என்ற பகுதியில் வசிக்க வேண்டுமானால் தான் கட்டாயம் ஃபிரென்சு மொழி தெரிந்திருக்க வேண்டும், இதைத்தவிர மற்ற பகுதிகளில் ஆங்கிலம் தான் பெரும்பாலானோர் பேசும் பொதுமொழியாக உள்ளது,பள்ளியிலும் ஃபிரன்ச்சு விருப்ப பாடமாக இருக்கின்றது.ஆகவே எங்களுக்கு மொழிப் பிரச்சனை இல்லை. ஆனாலும் பல மொழிகளை கற்று வைத்திருப்பதில் நமக்கு என்றைக்குமே நன்மைதான், நீங்கள் இன்னேரம் ஃபிரன்சு மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றிருபீர்கள் என்று நம்புகின்றேன்.உங்களிடம் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது சிஸ்டர், நன்றி.

இன்று இந்த காலிபிளவர் வறுவல் செய்து பார்த்தேன். ரொம்ப டேஸ்ட்டியாக நன்றாக இருந்தது. செய்வதும் ரொம்ப சுலபம். குறிப்புக்கு நன்றி மேடம்.

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு தோழி மனோகரி,
உடல்நிலை சரியில்லாததால் ரொம்ப எதுவும் செய்யமுடியலைப்பா. மன்னிக்கவும். (செல்லம் எப்படி இருக்கார்?)
பச்சை மிளகாய் மணத்தோடு ரொம்ப டேஸ்டியா இருந்துச்சு. நல்லதொரு குறிப்புக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மன்னிப்பு வேற கேட்கிறாயா சரி விடு. என்னவருக்கு காலிபிளவர் பிடிக்காது ஆகவே எனக்கு மட்டும் இப்படி செய்துக் கொள்வேன் ரொம்ப டேஸ்டாக இருக்கும். நீயும் செய்து பார்த்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. அன்புச் செல்லமா நல்லா இருக்கான் வெயிட் தான் கூடிட்டானாம் இருபது பவுன்டை குறைக்கனுமாம் மற்றபடி ஜாலியாக இருக்கான் விசாரிப்புக்கு ரொம்ப நன்றிப்பா. உன் உடல் நிலையை கவனமாக பார்த்துக்கொள் மீண்டும் மற்றொரு சந்தர்பத்தில் பேசுவோம் நன்றி.

ரொம்ப நன்றாக இருந்தது. நன்றி.

ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருந்தது. நான் தான் கொஞ்சமா பயந்துட்டேன், தண்ணி ஊத்தாம செய்யறோமே, எங்க தீஞ்சுடுமோன்னு. நல்லா வந்தது. நன்றிங்க !!

ஒரு சந்தேகம் - உங்க மீன் குழம்புக்கு இங்கு (USA) கிடைக்கும் சாலமன் பயன்படுத்தலாமா? இல்லை உங்க suggestion எதாச்சும் இருந்தா சொல்லுங்க.

இப்படிக்கு,
சந்தனா