முள்ளங்கி புகாது

தேதி: November 6, 2006

பரிமாறும் அளவு: 5நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முள்ளங்கி - அரைக்கிலோ
வெங்காயம் - இரண்டு
காய்ந்த மிளகாய் - நான்கு
பூண்டு - இரண்டு பற்கள்
தேங்காய்ப்பூ - அரைக்கோப்பை
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரைதேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி


 

முள்ளங்கியின் தோலை சீவி நன்கு கழுவிக் கொள்ளவும். பிறகு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும்.
பிறகு அடிகனமான வாயகன்ற சட்டியை காய வைத்து முள்ளங்கியை கொட்டி வதக்கவும். காயிலுள்ள நீர் முழுவதும் வற்றும் வரை வதக்கி ஒரு தட்டில் கொட்டி வைக்கவும். இப்பொழுது காய் அரை வேக்காடாக வெந்து இருக்கும்.
பிறகு அதே சட்டியல் மீண்டும் அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காயவைக்கவும். பிறகு கடுகு சீரகத்தை போட்டு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு கறிவேப்பிலை போட்டு வறுக்கவும்.
பிறகு வதக்கிய காயை கோட்டி உப்பை போட்டு நன்கு கிளறி அரைக்கோப்பை நீரை தெளித்து மூடிபோட்டு வேகவிடவும்.
நீர் முழுவதும் வற்றியவுடன் தேங்காய்ப்பூவை தூவி நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

i tried this recipe..was superb.. thanks to arusuvai..
it helps ppl who live outside india,,esp like me who is naive in cooking

ரொம்ப டேஸ்டியான, வித்யாசமான ரெசிப்பி மேடம். ரொம்ப தெங்கஸ். செய்வதற்கும் சுலபமாக் இருந்தது. பெயர்க்காரணம் கொஞ்சம் விளக்கம் கொடுத்தீங்கனா நல்லா இருக்கும். ஆங்கிலத்தில் ரேடிஷ் கறி என்றுதான் இருக்கு. ஆனால், தமிழில் வித்யாசமா இருக்கேன் கேட்கிறேன். ஒரு வேல ஃப்ரென்ச் மொழியோ என்று தெரிந்து கோள்ள ஆசை.
அய்யோ எனக்கு முள்ளங்கி வச்சி எத்தனை வகை செய்ய தேரியு(து)ம்: முள்ளங்கி புட்டு, துவையல், கறி, புகாது, கார குழம்பு, மேலும். தேங்க்ஸ் டூ அருசுவை

இப்படிக்கு
இந்திரா

indira

டியர் இந்திரா முள்ளங்கி சுவையை விரும்புகின்றவர்களுக்கு இந்த புகாதும் ரொம்ப பிடிக்கும். இந்த குறிப்பின் பெயர் காரணம் என்னவென்று தெரியவில்லை என் அம்மா வழியில் அப்படி தான் பொரியலை சொல்லுவார்கள், முக்கியமாக தேங்காய் அதிகமாக போட்டு வதக்கிச் செய்யும் எல்லா பதார்த்தத்தையும் புகாது என்று சொல்லுவோம்.தங்களின் ஆர்வத்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

செல்வி. இந்திரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த முள்ளங்கி புகாதின் படம்

<img src="files/pictures/mullangipukathu.jpg" alt="picture" />

டியர் இந்திரா, இத்தனை குறிப்புகளைச் செய்து படமெடுத்து அனுப்பியுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது புகாதின் படம் நன்றாக உள்ளது மிக்க நன்றி.

முள்ளங்கி புகாது! அருமையான ருசி. இதுவரை இப்படி முள்ளங்கி சமைத்ததில்லை. வெருமே சாப்பிடவே ரொம்ப டேஸ்ட்.உங்க குறிப்புக்கு நன்றி மனோகரி மேடம்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..