ஸ்பெஷல் மீன் ரோஸ்ட்

தேதி: October 12, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (4 votes)

 

முள் அதிகமில்லாத மீன் (வஞ்சிரம்) - அரை கிலோ
தேங்காய் எண்ணெய் - அரை கப்
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
தக்காளி - ஒன்று
புளிக்கரைசல் - 2 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - ஒரு கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
மிளகு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

மிளகைப் பொடி செய்து கொள்ளவும். மீனை கழுவி தண்ணீரை வடியவிட்டு, அதனுடன் சிறிது மஞ்சள் தூள், பொடித்த மிளகு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 2 மணி நேரம் வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மீனை போட்டு முக்கால் பதம் வேகுமளவு வறுத்தெடுக்கவும். (மொறு மொறுப்பாக வறுக்க கூடாது).
மீன் வறுத்து மீதமுள்ள எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாயை நன்கு சிவக்க வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய அல்லது தட்டிய இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டவும்.
பிறகு புளிக்கரைசல் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
அதனுடன் தேங்காய் பால் ஊற்றி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் மீனைப் போட்டு அதிகமாகக் கிளறாமல் ஒருமுறை பிரட்டிவிட்டு மூடி விடவும். அதிக தீயில் வைத்து குழம்புடன் தேங்காய் பால் சேர்ந்து வற்றும் வரை (சுமார் 15 நிமிடங்கள் வரை) கொதிக்கவிடவும். குழம்பு நன்கு வற்றி மீனுடன் சேர்ந்து மேலே எண்ணெய் தெளிந்து நிற்கும்போது அடுப்பை அணைத்துவிட்டு கறிவேப்பிலையை கசக்கித் தூவி லேசாக கிளறிவிட்டு மூடிவிடவும்.
சுவையான மீன் ரோஸ்ட் ரெடி.

மீனை அதிகம் கிளறினால் உடைந்து போகும் என்பதால் மீனைப் போடுவதற்கு முன்பே குழம்பில் உப்பு சரிபார்த்துவிடவும். குழம்பு வற்றிய பின் உப்பு கூடுதலாக இருக்கும் என்பதால் உப்பு சேர்க்கும் போது பார்த்துச் சேர்க்கவும். இதனை அடுத்த நாளுக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அலாதியாக இருக்கும். அருமையான குறிப்புக்கு மிக்க நன்றி தளிகா. மீன் மட்டுமல்ல இதில் உள்ள மசாலாவை சாதத்தோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருந்தது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுப்பரா இருக்கு உங்க மீன் ரோஸ்ட்.

ஹாய் அக்கா, பார்க்கும் போதே சாப்பிட தோணுது, சூப்பர்.

Simply superb dish

if you follow the given word life will get easy with out any stress between couples
SLAGO -S =Support L=Loving A=Accepting G=Giving O=Open

by
Indra raj

அருமையான மீன் ரோஸ்ட் வனி. பார்க்கும்போதே சாப்பிட தோணுது.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மீன் ரோஸ்ட் ரொம்ப அருமைங், நாவில் ஜலம் ஊறுதுங், படங்களும் ரொம்ப அருமைங் :-)

நட்புடன்
குணா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

குறிப்பை தந்த தளிகாவிற்கு மீண்டும் நன்றி :)

ரினோஸ்... என் குறிப்பு இல்லைங்க, தளிகா ரெசிபி :) மிக்க நன்றி.

சசி... செய்து சாப்பிட்டுடுங்க ;) மிக்க நன்றி.

இந்திரா... மிக்க நன்றி :)

உமா... பார்த்தா சாப்பிட இயலாதாம்... செய்துடுங்க :) மிக்க நன்றி.

குணா’ங்க... கீரை பிரியர்ன்னு எண்ணியிருந்தேன் ;) மீனும் பிரியமோ?? அப்போ சரி. நன்றி நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் அக்கா, பார்க்கும் போதே சாப்பிட தோணுது, சூப்பர்.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா