சிக்கன் & எக் ஃப்ரை

தேதி: October 14, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (8 votes)

எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
முட்டை - ஒன்று
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - முக்கால் தேக்கரண்டி + ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

சிக்கனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வறுத்துக் கொள்ளவும். (அதிகமாக சிவக்க வறுக்கத் தேவையில்லை). வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாகவும் நறுக்கி வைக்கவும். தக்காளியை சற்று பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டையுடன் உப்பு மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து அடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பச்சை மிளகாயை வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் வெங்காயம், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் அரை பதமாக வதங்கியதும், இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி கிளறி வேகவிடவும்.
முட்டை அரை பதம் வெந்ததும் பொரித்த சிக்கன், தக்காளி, முக்கால் தேக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறிவிடவும். முட்டையுடன் அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான சிக்கன் & எக் ஃப்ரை தயார். இது ஃப்ரைட் ரைஸ், வெஜ் பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

சூப்பர். :) பார்க்கவே நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் & டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மிகவும் நன்றாக உள்ளது. Nice recipe.

Tnks Jo.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

recipe super'ah iruku

maha

Tnk u Maha. mam ellaam venam akka pothum.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Supero super.easy receipe

Be simple be sample

Nandriyo... nandri Revs.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சிக்கன் & எக் ஃபிரை ரொம்ப அருமையா இருக்குங்க, படங்களும் அருமைங் அக்காங் :-)

நட்புடன்
குணா

ரொம்ப நன்றிங்.... குணாங்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா