வாழைத்தண்டு சாலட்

தேதி: October 15, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

வாழைத்தண்டு - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எலுமிச்சை - ஒன்று
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

வாழைத்தண்டை மிகவும் மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும்.
தாளித்தவற்றை வாழைத்தண்டுடன் சேர்த்து கையால் தூக்கி குலுக்கிவிடவும்.
ஹெல்தி வாழைத்தண்டு சாலட் ரெடி.
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.

இதற்கு வாழைத்தண்டைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இளசான தண்டில் மட்டுமே இதைச் செய்ய வேண்டும். இளசான தண்டாக இருந்தால் நகத்தால் அழுத்திப் பார்த்தால் நன்கு அழுந்தும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான சாலட் சகோதரி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பு பிடித்திருக்கிறது. தோட்டத்தில் நிற்கிற ஒற்றை வாழையை வெட்டுகிற அன்று நிச்சயம் இங்கு மேசையில் வாழைத்தண்டு சாலட் இருக்கும். :-)

‍- இமா க்றிஸ்