தக்காளி பச்சடி

தேதி: October 17, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (7 votes)

 

பழுத்த தக்காளி - 4
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - சிறிது
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
பான்டன் இலை - சிறு துண்டு
சீனி - 10 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை


 

தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பான்டன் இலை போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் முந்திரி, திராட்சையைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு அதனுடன் தக்காளி சேர்த்துக் கிளறிவிட்டு மூடி போட்டு வேகவிடவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. தக்காளியில் உள்ள தண்ணீரே போதும்).
தக்காளி நன்கு குழைய வெந்ததும் உப்பு மற்றும் சீனி சேர்க்கவும். இப்போது சற்று நீர்த்து இருக்கும். மீண்டும் வேகவிடவும்.
சீனி நன்றாக கரைந்து பாகு போல் பிசுபிசுவென்று தக்காளியுடன் சேர்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான இனிப்பு தக்காளி பச்சடி தயார். பிரியாணி, நெய் சாதம் சாப்பிட்ட பின்பு கடைசியாக சாப்பிடுவதற்கேற்ற நல்ல இனிப்பு பச்சடி இது. இதனுடன் சீனி தொவை என்ற சீனியில் செய்த தண்ணீருடன் வாழைப்பழம், எலுமிச்சை சாறு, பச்சடி ஆகியவற்றை நெய் சாதத்தில் சேர்த்து சாப்பிடுவார்கள். சுவை அபாரமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பச்சடி பார்க்கவே நல்லா இருக்கு ரஸியா. ட்ரை பண்ணி பாக்குறேன். சீனி தொவைன்னா என்ன? அறுசுவைல அந்த ரெசிபி இருக்கா? இல்லன்னா ரெசிபி சொல்ல முடியுமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர்... :) ரொம்ப நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் வசனம் ரொம்ம்ப பிடிச்சி இருக்கு - நன்றி

முதல் பதிவிற்கு நன்றி உமா,பச்சடி பார்க்க மட்டுமில்லாமல் சுவைக்கும் நன்றாக இருக்கும் உமா,ஹிஹி.
சீனி தொவைன்னா சட்டியில் நெய் ஊற்றி கிராம்பு,பட்டை,ஏலக்காய்,பான்டன் இலை இவைகளை போட்டு தாளித்து அதில் தேவையான அளவு( 2,3 தம்ளர் அளவு) தண்ணீர் ஊற்றி சீனி சுல்லென்று இருக்கும் அளவுக்கு போட்டு மூடி போட்டு கொதிக்க விடனும்.நன்றாக கொதித்து தண்ணீர் கொஞ்சம் வற்றி லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும் சீனி தொவை.
நெய் சோற்றுடன் வாழைப்பழம்,தக்காளி பச்சடி இவைகளை போட்டு நன்றாக பிசைந்து அதில் சீனி தொவையை ஊற்றி எலுமிச்சை சாறு ஊற்றி சாப்பிடுவார்கள்,சுவை ரொம்ப நல்லா இருக்கும்,சீனி தொவையை பரிமாறும்போது அதன் மேல் தயில் 1 கரண்டி போட்டு லேசாக கலக்கி விட்டு வைப்பார்கள்.
இதான் சீனிதொவை.அந்த காலத்தில் திருமணத்தில் கண்டிப்பாக இது இருக்கும்.வீட்டில் ட்ரை பன்னி பாருங்கள்.

Eat healthy

ரொம்ப நன்றி வனிதா

Eat healthy

ரொம்ப நன்றி சார்,என் வசனம் என்று எதை சொல்கிறீர்கள்?

Eat healthy

நன்றி ரஸியா. ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரசியா சூப்பரா இருக்குங்க :) எனக்கு பிடிச்ச பச்சடி

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

very nice.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நன்றி தோழிகளே
ஸ்வர்னா & பூங்காற்று

Eat healthy

oh yes its good food