கெண்டை மீன் வறுவல்

தேதி: October 18, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

கெண்டை மீன் - 3
தக்காளி - ஒன்று
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்


 

மீனைச் சுத்தம் செய்து துண்டுகள் போட்டுக் கொள்ளவும். மற்ற தேவையான பொருள்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
மீன் துண்டுகளுடன் தூள் வகைகள், உப்பு மற்றும் தக்காளி சேர்க்கவும். (தக்காளியை பிசைந்து சேர்க்கவும்).
மீனுடன் தக்காளி மற்றும் தூள் வகைகள் சேரும்படி நன்றாக பிசைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊறவைத்த மீன் துண்டுகளைப் போட்டு இரு புறமும் வேகும் வரை பொரித்தெடுக்கவும்.
சுவையான கெண்டை மீன் வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீன் வறுவல் சூப்பர்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Nalla iruku innoru murai iruku milakai thul, milagu thul, manjal thul, inji pundu viluthu, uppu anaithum serthu water vittu kalanthu fish la thadavi oora vaithu coconut oil la porithal anaithu fishum supera irukum try it. dosai kallil porithal inji pundu serka kudathu serthal kallil ottum