நெய் சோறு

தேதி: October 21, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

 

பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் - ஒன்று
பான்டன் இலை - ஒரு துண்டு
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
நெய் (அ) வெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 3 கப்
தாளிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா ஒன்று


 

வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். மல்லித் தழையை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் (அ) வெண்ணெயை உருக்கி, அதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர் மற்றும் மல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
அரிசியைக் களைந்து ரைஸ் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும்.
அதனுடன் தாளித்தவற்றைச் சேர்த்து குக்கரை மூடி ஆன் செய்யவும்.
கொதிக்கும் போது இடையில் ஒரு முறை குக்கரைத் திறந்து கிளறிவிடவும்.
பிறகு மூடி போட்டு மீண்டும் வேகவிடவும். குக்கர் வாமில் வந்ததும் சிறிது நேரம் அதிலேயே வைத்திருந்து எடுக்கவும்.
கமகம நெய் சோறு ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Rasia romba nalla seithu irukeenga ithe polathaan naangalum seivom thakkali thengaai paal serppom superpaa vaalthukal

நெய் சோறு நல்லா இருக்கு ரஸி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி நஸ்ரின்,தக்காளியும்,தேங்காய் பாலும் சேர்த்து அடுத்த முறை செய்து பார்கிறேன்.

Eat healthy

சீனிதொவை குறிப்பு உங்க பதிவிற்கு பதில் அனுப்பிட்டேன் உமா,நெய்சோறும்,தக்காளி பச்சடியும்,சீனிதொவையும் செய்து சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க உமா

Eat healthy

நன்றி ரஸி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ரசியா அருமையா இருக்கு நெய்சோறு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பாராட்டுக்கு நன்றி

Eat healthy

நெய் சோறு,தக்காளி பச்சடி மட்டும் தானா?எனக்கு ஐஞ்சுகறி சோறு வேனும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நீங்க வீட்டுக்கு வாங்க,நான் செஞ்சி தரேன்,அருசுவைல குறிப்பை போடத்தான் முடியும்,எடுத்து சாப்பிடும் அளவுக்கு வசதிகள் இல்லை,இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்.ஹிஹி

Eat healthy

மிகவும் நன்றாக இருந்தது இந்த நெய் சோறு நன்றாக இருந்தது . பாராட்டு கிடைத்தது.மிக்க நன்றி.

Hi vasanthi j how r u

ரஸியாக்கா உங்கள் முறையில் நெய்சோறு செய்து பார்த்தேன் சொதப்பிட்டேன் 6 கப் அரிசிக்கு குறைவான நெய் தயிர் மற்றும் தண்ணீர் வைத்ததால் சோறும் வெரையாக இருந்தது வழவழப்பு மற்றும் மணமும் குறைவாக இருந்தது திட்டாமல் சாப்பிட்டு எழுந்துவிட்டார்கள் அடுத்த முறை திருந்த செய்ய வேண்டும் இன்ஷாஅல்லாஹ்