உருளைக்கிழங்கு சாதம்

தேதி: October 25, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (10 votes)

அரிசி - ஒன்றரை கப்
உருளைக்கிழங்கு - 250 கிராம்
சோயா உருண்டைகள் - 20 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
கறிவேப்பிலை
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரைத் தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு

அரிசியை வேகவைத்து உதிர் உதிராக வடித்து ஆறவைக்கவும். உருளைக்கிழங்கை அரை வட்டவில்லைகளாக நறுக்கி பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்துப் பிறகு பொரித்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். அதில் பாதியளவு வெங்காயத்தை மட்டும் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, மீதியுள்ள வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் தூள் வகைகள் மற்றும் சாஸ் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
அதனுடன் பொரித்த உருளைக்கிழங்கு, சோயா உருண்டைகள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மசாலா சேரும் வரை வேகவிடவும்.
அனைத்தும் சேர்ந்து வந்ததும் சாதம் மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
லஞ்ச் பாக்ஸுக்கு கொடுத்துவிட சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

உருளைக்கிழங்கு சாதம், ரொம்ப ரொம்ப அருமையா இருக்குங், படங்களும் அருமைங் அக்காங் வாழ்த்துக்கள்ங்க,

நட்புடன்
குணா

உமா உருளை சாதம் பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு பசங்களுக்கு செய்து கொடுக்க இன்னொரு வகை சாதம் கிடைச்சுடுச்சு...... நன்றி உமா

குறிப்பை வெளியிட்ட டீமுக்கு மிக்க நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் பதிவிற்கு நன்றிங் தம்பிங்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி தேவி உங்க பதிவிற்கும், வாழ்த்திற்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எளிதான குறிப்புக்கு பாராட்டுக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

super kurippu madam.

Tnk u Sankari. madam ellam venam akka pothum.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

very nice lunch box recipe.

Tnks jo.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

very nice lunch

Tnk u.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா