கோதுமை தோசை

தேதி: November 7, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமைமாவு - ஒன்றரைக் கோப்பை
இட்லிமாவு - ஒரு கோப்பை
(அ)அரிசி மாவு - அரைக்கோபை
வெங்காயம் - ஒன்று
காய்ந்த மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
மோர் - அரைக்கோப்பை
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தோசை சுட தேவையான அளவு


 

கோதுமைமாவையும், இட்லிமாவையும் சேர்த்து உப்புத்தூளைப் போட்டு மோரை ஊற்றி நன்கு கலக்கவும்.
தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து இட்லிக்கும் தோசைக்கும் இடைப்பட்ட மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். காய்ந்தமிளகாயை மிகவும் சிறிய துண்டுகளாக கிள்ளி வைக்கவும்.
கறிவேப்பிலை கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மேற்கண்ட அனைத்து தயாரித்த பொருட்களையும் கோதுமை கரைசலில் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும். ஊற வைக்க வேண்டிய அவசியமில்லை.
தோசைக்கல்லை காயவைத்து ஒரு பெரிய குழிக்கரண்டியில் மாவை எடுத்து வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி விட்டு எண்ணெயை சுற்றிலும் ஊற்றி பொன்னிமுறுவலாக சுட்டு எடுக்கவும்.
சுவையான சுலபமான இந்த தோசையுடன் காரமான குழம்பை பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும்.


சிறு வயதில், பல சமையங்களில் நடுராத்திரியானால் அகோர பசி எடுக்கும் எனக்கு. அந்த நேரத்திலும் என் அம்மா எனக்கு இந்த தோசையை சுடசுட செய்து சாப்பிட வைத்து தூங்க வைப்பார்கள். இந்த குறிப்பை எழுதும் பொழுது என் அம்மாவின் நினைவு வந்து கண்களை நிறைத்து விட்டது என்பதை இதை வாசிக்கும் உங்களோடும் பகிர்ந்துக் கொள்கின்றேன்.

மேலும் சில குறிப்புகள்