கோதுமைரவை கிச்சடி

தேதி: November 7, 2006

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ரவை - ஒரு கோப்பை
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
இஞ்சிவிழுது - அரை தேக்கரண்டி
பூண்டுவிழுது - அரைதேக்கரண்டி
காய்கறி கலவையாக - ஒரு கோப்பை
(அ)ஏதாவது ஒரு வகையான காய்
தனியாத்தூள் - அரைதேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி


 

அடிகனமான சட்டியில் எண்ணெயை காய வைத்து சீரகத்தை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு நன்கு வறுக்கவும். தொடர்ந்து இஞ்சி பூண்டைப் போட்டு வதக்கி காய்கறிகளை போட்டு வதக்கவும்.
பிறகு ரவையைக் கோட்டி நன்கு கலக்கி விடவும். அதனுடன் உப்புத்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூளையும் போட்டு கிளறிவிட்டு இரண்டு கோப்பை சுடு நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது மூடியை போட்டு அடுப்பின் அனலை குறைத்து வேக விடவும்.
பத்து நிமிடம் கழித்து மூடியை திறந்து நன்கு கிளறி விட்டு கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.


இந்த சுவையான கோதுமை ரவை கிச்சடியை சிற்றுண்டியாகவோ அல்லது முழு உணவாகவோ பரிமாறலாம்.

மேலும் சில குறிப்புகள்