சிக்கன் கேரட் ரோஸ்ட்

தேதி: November 7, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (3 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
கேரட் - ஒன்று (பெரியது)
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
இஞ்சி விழுது - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

சிக்கனைக் கழுவி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைத்துக் கொள்ளவும். கேரட், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு சிக்கன், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு வதங்கவிடவும்.
சிக்கன் நன்கு வதங்கி அரைவாசி வெந்ததும் கேரட், மிளகாய் தூள் சேர்த்து வேகவிடவும். (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனில் இருக்கும் நீரே போதுமானது)
சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் கறிவேப்பிலை மற்றும் சாஸ் சேர்க்கவும்.
இதனை 15 – 20 நிமிடங்கள் மெல்லிய தீயில் வைத்து வேகவிட்டு, இடையே பிரட்டிவிடவும்.
ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், நெய் சாதம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான சுவையான சிக்கன் கேரட் ரோஸ்ட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சிக்கன் கேரட் ரோஸ்ட் ரொம்ப எளிமையா செய்யக்கூடியதா இருக்கு. வாழ்த்துக்கள்.. படங்கள் சூப்பர்ர்ர்.. :)

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

குறிப்பை வெளியிட்ட பாபு அண்ணா & டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி ஷபி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சிக்கன் கேரட் ரோஸ்ட் பார்க்க ரொம்ப அருமையா இருக்குங்க, படங்களும் ரொம்ப அருமைங்க அக்காங் :-)

நட்புடன்
குணா

ஹாய் தம்பிங். ரொம்ப நன்றிங்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

super dish sister i am eagerly for taste this chicken. images very nice.

Don't cry because it's over, smile because it happened.

keerthana

ஹாய் உமா இன்று உங்க

சிக்கன் கேரட் ரோஸ்ட் செய்தேன் ரொம்ப அருமயா இருந்தது சிக்கனோடு

கேரட் சேர்த்து இருப்பது வித்தியாசமா நல்லா இருந்தது என் மகனுக்கு ரொம்ப

பிடித்து இருக்கு விருப்பப்பட்டியாலில் சேர்த்துடேன் நன்றி

செய்து பார்த்து பதிவிட்டதுக்கு நன்றி தோழி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா