மில்க் ஸ்வீட்ஸ்

தேதி: November 8, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (10 votes)

எல்லாமே பால்..பால்..பால்தான். இனிப்பகங்களில் நாம் பார்க்கும் பெரும்பாலான இனிப்புகள் பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. அதாவது பாலைச் சுண்டச்செய்து கோவாவாக்கி அதில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. கோவாவை மூலப்பொருளாகக் கொண்டு தயார் செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு கணக்கே இல்லை. அவரவர் விருப்பம், சுவைக்கேற்ப நிறைய வகையான பால் இனிப்புகள் தயாராகின்றன. <br />
<br />
கோவா தயாரிப்பது எப்படி என்பதை இதற்கு முந்தைய குறிப்பில் (பால்கோவா) பார்த்தோம். மில்க் ஸ்வீட் செய்வதற்கான கோவா தயாரிக்கும் போது சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். அந்த பால்கோவா குறிப்பில் சீனியை கொஞ்சம் குறைவாக சேர்த்து, நெய்யும் சேர்த்தோம். பால் இனிப்புகள் செய்ய சீனியை கொஞ்சம் அதிகரித்துக் கொள்ளவும். நெய்யை தவிர்த்துவிடவும். அதாவது 5 லிட்டர் பாலுக்கு முக்கால் கிலோ சீனி சேர்க்கவும். (ஒரு லிட்டர் பாலுக்கு 150 கிராம் சீனி). சீனியே சேர்க்காமல் தயாரிக்கப்படும் கோவாவிலும் பால் இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. முதலில் சீனி சேர்த்து (நெய் சேர்க்காமல்) கோவாவை தயார்செய்து வைத்துக் கொள்ளவும். இது சுமார் 15 நாட்கள் வரை அப்படியே இருக்கும். கோவா செய்முறைக்கு பால்கோவா செய்முறைப் படங்களைப் பார்க்கவும். இனி கோவாவைக் கொண்டு செய்யப்படும் சில வகை இனிப்புகளின் செய்முறையைப் பார்க்கலாம்.
<br /><br />
இந்த முறை தேவையானப் பொருட்களின் அளவுகளைக் கொடுக்க வில்லை. செய்முறையில் கொடுத்துள்ளோம். அளவுகள் கொடுக்காதப் பொருட்களை தங்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்ளலாம்.

 

பால்
சீனி
ஏலக்காய் தூள்
முந்திரித் தூள்
முந்திரி சீவல்
பிஸ்தா சீவல்
சாரப்பருப்பு
வண்ணப் பொடிகள்


 

மேற்கண்ட முறையில் கோவாவை தயார் செய்து கொள்ளவும். அதை நன்கு பிசைந்து தனியே வைக்கவும். சிறிது நேரம் பிசைந்து வைத்தால் சற்று கெட்டியாகிவிடும். அதனை அப்படியே வைத்திருந்து தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். நிறைய வகை இனிப்புகள் செய்ய விரும்பினால் இது போல் வைத்திருந்து செய்யலாம். ஒன்று இரண்டு வகைதான் என்றால் அப்படியே இனிப்புகள் செய்ய பயன்படுத்தவும்.
இப்போது தூத் பேடா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவைக்கேற்ப கோவாவை எடுத்துக் கொண்டு ஒரு வெறும் வாணலியில் உதிர்ந்துக் கொட்டி, இளஞ்சூட்டில் கிளறிவிடவும். சூட்டில் கோவா உருகி சற்று நீர்த்தாற்போல் வரும்.
நன்கு இளகி வரும் வரை கிளறவும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, கோவாவை வாணலியின் ஓரங்களில் பரப்பிவிட்டு பிறகு கிளறவும். இறக்கி வைத்து கிளறியபின் கோவா சற்று கெட்டியாகிவிடும். என்ன வகை இனிப்பு செய்ய இருக்கின்றோமோ அதற்கு ஏற்றார்போல் இளக்கமாகவோ, இறுக்கமாகவோ கிளறி வைத்துக் கொள்ளவும்.
தூத் பேடாவிற்கு ஏலக்காயை நல்ல பொடியாக்கி, ஒரு மெல்லிய துளைகள் கொண்ட சல்லடையில் சலித்து, கோவாவில் கொட்டவும். அனைத்தையும் ஒன்று சேர கலந்து கொள்ளவும். பிறகு இவற்றை சிறு சிறு உருண்டைகளாக, சிறிய எலுமிச்சை அளவில் உருட்டி வைக்கவும்.
படத்தில் உள்ளதுபோல் தூத்பேடா அச்சு கடைகளில் கிடைக்கின்றது. இது தூத்பேடா வடிவம் கொண்டு வர பயன்படுகின்றது.
கோவா உருண்டைகளை அச்சு கொண்டு அழுத்தினால் தூத்பேடா வடிவம் கிடைத்துவிடும். உருண்டைகளின் மீது சிறிது முந்திரி சீவல், பிஸ்தா சீவல் அல்லது இரண்டு சாரப்பருப்பு, ஒரு உலர்ந்த திராட்சை இப்படி எதையாவது வைத்து அச்சினால் அழுத்திவிடவும்.
கோவாவை வாணலியில் இட்டு இளகச் செய்யும் போது, அதில் தேவையான வண்ணங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். சுவைக்கு தகுந்தாற்போல் எசன்ஸ் துளிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படி கலர் கலராக பால் பேடா செய்யலாம். விதிமுறைகள் கிடையாது.
அடுத்து டூட்டி ப்ரூட்டி சேர்த்து எப்படி மில்க் கேக் செய்யலாம் என்பதை பார்க்கலாம். இதற்கும் செய்து வைத்துள்ள கோவாவை வாணலியில் போட்டு நன்கு இளகும் அளவிற்கு சூடாக்கவும். அதில் ட்யூட்டி ப்ரூட்டி விரும்பிய அளவிற்கு சேர்க்கவும். நன்கு கிளறிவிடவும்.
பிறகு எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
பின்னர் அதனை கைகளால் தேய்த்து பிசைந்து விடவும். கோவா இன்னும் சற்று கெட்டியாகும்.
அதனை அரை அங்குல உயரத்திற்கு பரப்பி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஓரங்களில் வெட்டுப்படுவதை மீண்டும் லேசாகப் பிசைந்து கேக்குகளாக்கிக் கொள்ளவும். கடைகளில், பார்ப்பவர்களை கவர்வதற்காக கேக்குகளின் மேலே சில்வர் காகிதங்களை ஒட்டுவார்கள். வீடுகளில் தயாரிக்கும்போது அதனை தவிர்த்துவிடலாம்.

மேலும் சில வகை மில்க் ஸ்வீட்ஸ் படங்களைக் கீழே கொடுத்துள்ளோம். படங்களே கதை சொல்லும் என்பதால், இதற்கு விளக்கங்கள் தேவையில்லை என்று நம்புகின்றோம்.
<table>
<tr>
<td><img src="/photos/1/A0096_13.jpg" alt="milk sweets" /></td>
<td><img src="/photos/1/A0096_14.jpg" alt="milk sweets" /></td>
</tr>
<tr>
<td><img src="/photos/1/A0096_15.jpg" alt="milk sweets" /></td>
<td><img src="/photos/1/A0096_16.jpg" alt="milk sweets" /></td>
</tr>
<tr>
<td><img src="/photos/1/A0096_17.jpg" alt="milk sweets" /></td>
<td><img src="/photos/1/A0096_18.jpg" alt="milk sweets" /></td>
</tr>
<tr>
<td><img src="/photos/1/A0096_19.jpg" alt="milk sweets" /></td>
<td><img src="/photos/1/A0096_20.jpg" alt="milk sweets" /></td>
</tr>
<tr>
<td></td>
<td></td>
</tr>
</table>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படங்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் முதலில் வரும் படங்களில் இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறத்தில் காணப்படுவது என்ன?

முந்திரி, பிஸ்தா சீவல்கள், சாரப்பருப்பு, சில்வர் பேப்பர் எல்லாம் இந்தியாவில் எந்த கடைகளில் கிடைக்கும்? செய்து முடித்த மில்க் ஸ்வீட்ஸ் ஒரே மாதிரியான அளவுகளில் கட் பண்ணப்பட்டுள்ளதே? அதன் மேற்பரப்பும் சமமாக உள்ளதே? கையினால் பரப்பினால் இவ்வளவு அழகாக சமமான பரப்பு வராதே?மிஷின் கொண்டு பரப்பி, மிஷினாலேயே கட் பண்ணவேண்டுமா? ப்ளீஸ் சொல்லுங்க!

இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதும் கோவாதான். அந்த வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. சிறிது கோக்கோ பவுடரும் சேர்த்துள்ளார்கள். குறிப்பில் கொடுத்துள்ளதுபோல் கோவா என்பதுதான் இங்கு முக்கியம். அதில் நீங்கள் விரும்பியவற்றை சேர்த்து, உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நிறைய செய்து பார்க்கலாம். அதற்கு மாதிரியாகத்தான் சில படங்களை கீழே கொடுத்துள்ளோம். கோவாவுடன் ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் முந்திரிப்பொடி (ஒரு பங்கு கோவா, 2 பங்கு முந்திரிப் பொடி) சேர்த்து முந்திரி ரோல் செய்யலாம். கோவாவை இளகச்செய்யும் போது அதில் சேர்க்கவும். முந்திரியை மிக்ஸியில் இட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

முந்திரி, பிஸ்தா, சாரப்பருப்பு அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கும். பிஸ்தா, முந்திரியை வாங்கி மெல்லிய சீவல்களாக நாம்தான் சீவிக்கொள்ளவேண்டும். மெல்லிய கத்தி அல்லது பிளேடு கொண்டு சீவலாம். ஸ்வீட் மேல் ஒட்டப்படும் சில்வர் பேப்பர் (varag) சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும். எல்லா இடங்களிலும் கிடைக்குமா என்பது சந்தேகம். அருகில் உள்ள ஒரு ஸ்வீட் ஸ்டாலில் கேட்டீர்கள் என்றால் அவர்கள் வாங்கும் இடத்தை சொல்வார்கள்.

கேக்குகளாக கட் செய்வதற்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. கேக் கட் செய்யும் முறை எல்லோருக்கும் தெரிந்தது என்பதால் அதனைக் குறிப்பிடவில்லை. ஏற்கனவே மைசூர்பாகு கட் செய்வது படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. அதே முறைதான். ஒரு ட்ரேயில் கொட்டி பரப்பி (இதற்கு நெய் தடவக்கூடாது) மேற்புறத்தை ஒரு தோசைத் திருப்பியால் சிமெண்ட் பூசுவதுபோல் பூசி, பிறகு ட்ரேயை தலைகீழாக கவிழ்த்தால் சமமாக வரும். பிறகு அவற்றை கத்தியால் கீறி துண்டங்கள் போடவும். துண்டங்களை நேராக போடுவதற்கு ஒரு பெரிய ஸ்கேல் ஒன்றை பயன்படுத்துகின்றனர். நீளமான கத்தியும் வைத்திருக்கின்றார்கள். வீடுகளில் நாம் சிறிய அளவில் செய்வதால், அவ்வளவு பெரிய ஸ்கேல் மற்றும் கத்தி தேவையில்லை.

ரொம்ப நன்றி சார்!

naangal valum francil koluppu edutha milk thaan kidaikkiradu adai kondu gova thayaar saiya mudiyuma badil aliyungal!!!

பால்கோவாவின் மனம், சுவை இருந்தது ஆனால் அல்வா மாதிரி இருந்தது

பால்கோவாவின் மனம், சுவை இருந்தது ஆனால் அல்வா மாதிரி இருந்தது

ஒரு சந்தேகம். இந்த தூத்பேடா செய்வதற்கு நெய் சேர்க்க தேவையில்லையா?
குறிப்பில் நெய் சேர்க்காமல் கோவா செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.நெய் சேர்க்காமல் இவ்வளவு softaa வருமா.