பசலைக்கீரை சப்பாத்தி

தேதி: November 9, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்
கடலை மாவு - கால் கப்
பசலைக்கீரை - 2 கட்டு
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலாதூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சீரகம் - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
நெய் - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பச்சைமிளகாய், பூண்டு, அலசிய கீரையை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
கீரை நன்கு வதங்கிய பின் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமைமாவு, கடலைமாவு, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
பின் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர், எண்ணெய் விட்டு பிசையவும். பின் அரைமணி நேரம் மூடிவைக்கவும்.
பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக இடவும். சூடான தோசைக்கல்லில் அரை தேக்கரண்டி நெய் விட்டு சுட்டெடுக்கவும்.


பசலைக்கீரைக்கு பதில் சிபினாச் உபயோகப்படுத்தலாம். இதற்கு மாங்காய் ஊறுகாய் வைத்து பரிமாறவும்.

மேலும் சில குறிப்புகள்