வெங்காயக் காரக் குழம்பு

தேதி: November 9, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன வெங்காயம் - 200 கிராம்
புளி - சறிய எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு
கொத்தமல்லித் தழை - 1 டேபிள் ஸ்பூன்


 

எண்ணைச் சட்டியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை போட்டு வறுக்கவும்.
பின்பு சீரகத்தையும் வெந்தயத்தையும் வறுக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் சீவி அதே சட்டியில் போட்டு வதக்கவும்.
புளியை சிறிது சுடு தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியவுடன் புளி கரைச்சலோடு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து குழம்பு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
குழம்பு தயார் ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

வெங்காயக் காரக் குழம்பு சுவையாக இருந்தது.செய்வதற்கும் சுலபம் நன்றி
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்