அரைச்சுவிட்ட ரசம்

தேதி: November 9, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 1/2
புளி - சறிய எலுமிச்சை அளவு
சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
தக்காளி - 3
உப்பு
கொத்தமல்லித் தழை - 1 டேபிள் ஸ்பூன்


 

எண்ணைச் சட்டியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை போட்டு வறுக்கவும்.
பின்பு சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை அதே சட்டியில் போட்டு வதக்கவும்.
புளியை சிறிது சுடு தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியவுடன் சிறிதாக நறுக்கிய பூண்டு மற்றும் தக்காளியை வதக்கவும்.
புளி கரைச்சலோடு உப்பு, சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை கொதிக்கவிடவும்.
ரசம் தயார் ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வாணி!இன்று உங்கள் அரைத்து விட்ட ரசம் செய்தேன்.
சேர்வது மிகவும் சுலபம், நன்றாக இருந்தது நன்றி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.