வெயிட் கம்மி 9-11 TIME PASSED URINE & over sweating

என் குழந்தைக்கு 3 மாதம் முடிந்து நான்காவது மாதம் நடக்கிறது தாய் பால்தான் கொடுக்கிறேன் பாலும் ஓகே யாதான் இருக்கு but அவ வெயிட் கம்மியா இருக்கிறா ஒருமாதத்திற்கு 900g அதிகமாகணும் but 500g தான் வெயிட் போடுறா என்ன காரணம் ? அவ ஒருநாளைக்கு 9-11 தடவ ( 24hours) urine போற AND over sweating வியர்வை அதிகமா இருக்கு இது normal தானா ? கவலயாஇருக்கு please help me

குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்கு பின் 6 மாதம் வரை அவர்கள் சராசரியாக 500 கிராம் முதல் 1 கிலோ வரை எடை கூடுவார்கள். அதாவது ஒரு நாளைக்கு 20 கிராம் அளவில். இது நார்மல் தான். உங்கள் குழந்தை இந்த 500 கிராமுக்கும் குறைவாக கூடினாலும் பயம் தேவை இல்லை. 6 மாதத்துக்கு மேல் 500 கிராம் தான் கூடும். பொதுவாக பெண் குழந்தைகள் சற்று சிறிதாக இருக்கக்கூடும். தாய் தந்தையின் உடல் வாகும் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை நீங்கள் மருத்துவமனை செல்லும் போதும் உங்கள் குழந்தையின் மருத்துவர் அவள் தலையின் சுற்ரளவு, எடை அதிகரிப்பு, உயரம் எல்லாம் சரி பார்பார்பர்களே... குறைவு என்றால் அவர்களே காரணத்தையும் கண்டு விடுவார்கள். எனக்கு தெரிந்த வரை 1/2 கிலோ அதிகரிப்பு நார்மல் தான். பயம் இல்லை. வியர்வைக்கு எனக்கு காரணம் தெரியல, மருத்துவரை கேட்டுவிடுங்கள். யூரின் போவதெல்லாம் சகஜம் தான். பயம் வேண்டாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி வனிதா மேடம் இப்போது தான் i பீல் குட் ,சாரி too late now திருச்சி யில் பவர் கட் ரொம்ப யாஸ்தி ஆகிட்டுது

மேலும் சில பதிவுகள்