கேழ்வரகு புட்டு

தேதி: November 9, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேழ்வரகு மாவு - இரண்டு கோப்பை
சர்க்கரை - அரைக் கோப்பை
துருவிய தேங்காய் - ஒரு கோப்பை
உப்புத்தூள் - ஒரு சிட்டிகை


 

ஒரு அகலமான தட்டில் மாவைக் கொட்டவும். அதில் உப்புத்தூளை போட்டு கலக்கவும்.
பிறகு முக்கால் கோப்பை நீரை சிறிது சிறிதாக தெளித்து பிசையவும். அழுத்தி பிசைய கூடாது. மாவு வறட்சியாக இருந்தால் மேலும் சில மேசைக்கரண்டி நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
மாவு நன்கு மலர்ந்து தூள் தூளாக ஆனவுடன் ஒரு ஈர துணியில் போட்டு ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும்.
பிறகு புட்டு வெந்ததை உறுதி செய்துக் கொண்டு வாசனையிலேயே தெரிந்து விடும். அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி உதிர்த்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காய்ப்பூவைப் போட்டு நன்கு கலக்கவும். புட்டு சற்று ஆறிய பிறகு சர்க்கரையைப் போட்டு கலக்கி விட்டு, உடனே பரிமாறவும். சிறு குழந்தைகளுக்கு இந்த புட்டை செய்து கொடுத்துப் பாருங்கள் மீண்டும் மீண்டும் செய்து தரும்படி கேட்பார்கள்.


தயாரித்த மாவை மின்சாரத்தில் இயங்கும் அரிசி குக்கரின் ஜல்லியின் மீது வைத்தும் மூடி போட்டு வேகவைக்கலாம். புட்டு சிறிது ஆறிய பிறகே சர்க்கரையை போட்டு கலக்கவும். இல்லையென்றால் வறுக்காத மாவல்லவா பிசுபிசுப்பு தட்ட வாய்ப்பிருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Dear mano

Can we fry the ragi before mixing the water?

Can we prepare this in puttu maker instead of wet cloth?

kindly clarify

thanks

டியர் ஆஷா தாமதமான பதிலுக்கு வருந்துகின்றேன்,கேழ்வரகு மாவை வறுத்தும் புட்டு செய்யலாம் ஆனால் பச்சைமாவில் செய்வதுப் போல் சாப்டாக இருக்காது.புட்டு மேக்கரில் செய்வதை விட துணியில் சுற்றி செய்வது நல்லது இதனால் புட்டு உதிரி உதிரியாக இருக்கும்.

இப்பொ நான் 3 மாதம். கேழ்வரகு மாவு சாப்பிடலாமா?
அது சூடு இல்லையா? இந்த கேள்விக்கு வேறு யாருக்காவது பதில் தெரிந்தாலும் சொல்லுங்களேன்.

Kavithaa... if you have not had it so far.. dont.. cos it causes diarehea... but if it is made as murukku or pakoodaa it wont hurt as long as you take in small quantity in moderation.

are u having craving to eat raagi?

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹலோ கவிதா தாயாகப் போகும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள். கேழ்வரகு மாவு சூடு இல்லை அதில் சமைத்த உணவுகள் குளுமைவாய்ந்தது. இதை கர்பிணிகள் தாராளமாக சாப்பிடலாம் நானும் கேழ்வரகு கூழை தயிர் சேர்த்து என் அத்தையின் கைகளால் கரைத்து கொடுத்ததை நிறைய குடித்திருக்கின்றேன்.பல சமயம் கேழ்வரகு களியும் சாப்பிட்டிருக்கேன். தைரியமா சாப்பிடுங்கள் ஒன்றும் ஆகாது உடம்புக்கு ரொம்ப நல்லது.

நன்றி இலவீரா மேடம், மனோஹரி மேடம்.

நலமாக இருக்கீங்களா?வெகு நாட்க்களாகிவிட்டது உங்களுடன் பேசி!நானும் கேழ்வரகு புட்டை செய்து பார்த்தேன்,நன்றாக இருந்தது,மிக்க நன்றி!செய்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு உடன் பின்னூட்டம் தர முடியல..!மேலும் அஸ்மாவிடம் என்னை நினைவுவைத்து விசாரித்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!நானும் உங்களைப்போல் மன்றத்திர்க்கு வரவில்லை என்றாலும் பார்வை இடத்தான் செய்கிறேன்!சில நேரம் சில அரட்டைகளை பார்த்து ரசிக்கிறேன்.சில நேரத்தில் சிலருக்கு சங்கடங்கள் ஏற்ப்படுவதை பார்த்து மனம் வேதனையும் ஏற்ப்படுகிறது. அப்புறம் உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா? உங்கள் செல்லம் டைகரும் நலந்தானே? இப்போ அங்கு கால நிலை எப்படி உள்ளது இங்கு நன்றாக இருக்கிறது!மற்றவைக்கு பின்பு
என்றும் அன்புடன்
ரஸியா

அன்பு சகோதரி ரஸியா அவர்களுக்கு தங்களின் பதிவை நான் எதிர் பார்க்கவில்லை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் அனைவரும் நல்ல சுகம், நாடுவதும் அதுவே. இந்த புட்டு குறிப்பு ஊரில் எனது குழந்தைகளுக்கு மாலை நேர உணவாக அடிக்கடி செய்வதுண்டு, இங்கு கேழ்வரகு கிடைப்பதில்லை ஆகவே செய்து நீண்ட காலமாகி விட்டது. உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சியே. நீங்க மன்றத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்ததை வைத்து எனது அனுபவத்திலிருந்து அதுவும் நீங்க கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் என்னவென்றால் மன்றத்தில் நடப்பதை எல்லாம் பார்த்து பிடித்திருந்தால் ரசிக்கலாம் இல்லாவிட்டால் விட்டுவிடலாம். அதை விடுத்து மனவேதனை அடைவதனால் ஒரு பிரயோஜனமுமில்லை காரணம் இங்கு நிழல் எது, நிஜம் எது என்று தெரியாத போது எதற்கு வீண் சங்கடம், எப்பொதும் போலவே ஒரே மாதிரியாக இருந்து விடுவது நல்லது தானே. ஆமா.. நீங்க ஏன் குறிப்புகள் கொடுப்பதில்லை?முக்கியமாக யாரும் சமைக்கலாமில் நீங்கள் கொடுக்கும் குறிப்புகளுக்கு நான் என்றுமே உங்கள் ரசிகை என்பதை மறக்க வேண்டாம்,ஆகவே மீண்டும் தொடர்ந்து அதில் குறிப்புகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். ஒகே டியர் மற்றொரு சந்தர்ப்பத்தில் உங்களை மீண்டும் சந்திக்கின்றேன் நன்றி.

அன்பின் மனோகரி மேம், சுவையான புட்டு. நான் தேங்காய்ப்பூவையும் கலந்து அவிப்பேன். இம்முறை உங்கள் முறையில் இறுதியில் கலந்தேன். நன்றாக இருந்தது.
-நர்மதா :)