தினை பொங்கல்

தேதி: November 26, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

தினை அரிசி - 1/4 கிலோ
பாசிபருப்பு - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
இஞ்சி - 1 துண்டு
மிளகு , சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு


 

கடாயில் தினை அரிசியை போட்டு நிறம் மாறும் வரை வறுக்கவும்

பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்

இரண்டையும் சேர்த்து 1:21/2 என்ற் விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவைக்கவும்

பின் நெய்யில், முந்திரி,இஞ்சி,மிளகு, சீரகம்,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து , வேகவைதத தினையில் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக் கலக்கி
தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்