உருண்டைக் குழம்பு

தேதி: November 27, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (9 votes)

 

கடலைப்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 2+2
தக்காளி - 2
தேங்காய் - ஒரு மூடி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 4+2+2
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
சோம்பு - ஒரு தேக்கரண்டி


 

கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவலுடன் 4 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருள்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை துண்டுகளாகவும் நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடலைப்பருப்பு ஊறியதும் ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். அதனுடன் 2 வெங்காயம், 2 பச்சை மிளகாய், முக்கால் தேக்கரண்டி உப்பு போட்டு பிசைந்து, பெரிய எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
இதேபோல் மீதமுள்ள உருண்டைகளையும் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய், ஒரு மேசைக்கரண்டி டால்டா ஊற்றி காய்ந்ததும் சோம்பு தாளிக்கவும். அதனுடன் தட்டிய பூண்டை போட்டு சிவந்ததும் மீதியுள்ள வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை மற்றும் 2 பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் தக்காளியைச் சேர்த்து குழையும் வரை வதக்கவும். அதன் பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள் போட்டு பிரட்டிவிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதித்ததும் தேங்காய் விழுதைச் சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
பிறகு பொரித்த உருண்டைகளைப் போட்டு கொதிக்கவிடவும். கடைசியில் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான பொரித்த உருண்டைக்குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப சூப்பர். உருண்டையை சும்மாவே சாப்பிடனும் போல இருக்கு. செய்து பார்த்துடறேன். :) இல்ல சாப்பிட்டுடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கும்போதே நாவூறுது. விருப்பப்பட்டியலில் சேர்த்துட்டேன். அவசியம் செய்து பார்க்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர் ரெசிபி .... கண்டிப்பா நாளைக்கு இதெ செய்தே ஆகனும்...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

enunudaya favourite item i must try this

வாழு, பிறரை வாழவிடு, நீ வாழ பிறரை கெடுக்காதே.வாழ்க வளமுடன்.sunandhavikram

HI sunandhavikram good thanks how r u

nethuthaan thanikudithanam vanthom. amma sammathathoda. naalaiki ithu thaan menu. thnx. urundai kulambunna uyir. ippa therinjikiten. thnk u so much.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

urundai kulambu parkave romba nalla irukku seithu sapidanum pole irukku.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.