கத்திரிக்காய் கடைச்சல் சமையல் குறிப்பு - 2713 | அறுசுவை


கத்திரிக்காய் கடைச்சல்

food image
வழங்கியவர் : Manohari
தேதி : வெள்ளி, 10/11/2006 - 00:45
ஆயத்த நேரம் : 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 5 நபர்களுக்கு

 

 • கத்திரிக்காய் - அரைக்கிலோ
 • வெங்காயம் - இரண்டு
 • பூண்டு - நான்கு பற்கள்
 • பச்சைமிளகாய் - ஆறு
 • பச்சை தக்காளி - நான்கு
 • புளி - நெல்லிகாய் அளவு
 • உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
 • கடுகு - ஒரு தேக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
 • சீரகம் - அரை தேக்கரண்டி
 • காய்ந்தமிளகாய் - ஒன்று
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து.
 • கடலெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

 

 • கத்திரிக்காயின் காம்பை நீக்கி விட்டு நான்காக நறுக்கி கொள்ளவும்.
 • பிறகு தாளிப்பு பொருட்களைத் தவிர்த்து, மற்ற பொருட்களை காயுடன் சேர்த்து ஒரு கோப்பை நீரை ஊற்றி மிதமான அனலில் வேகவைத்துக் கொள்ளவும்.
 • காயுடன் எல்லாப் பொருட்களும் நன்கு வெந்தவுடன் இறக்கி அதிகப்படியான நீரை வடித்து விட்டு நன்கு கடைந்துக் கொள்ளவும். மையாக கடையக் கூடாது.
 • வேண்டிய அளவு கெட்டி பதமாக கடைந்து கொண்டு ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காய வைத்து தாளிப்பு பொருட்களைப் பொட்டு கருக வறுத்து கலவையின் மீது கொட்டவும். மாவு பண்டங்களுக்கு ஏற்ற பக்க உணவாக இந்த கத்திரிக்காய் கடைச்சலை பரிமாறலாம்.
கத்திரிக்காய் வாங்கும் பொழுது நன்கு முற்றிய காயாக பார்த்து வாங்கவும். முற்றிய காய் கொண்டு கடைந்தால் அதிக ருசியாக இருக்கும்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..