குழந்தை தொப்புள்

வணக்கம் தோழி கள, என் மகளுக்கு 3 வயது ஆகிறது . என் மகளுடையிய தொப்புள் கொஞ்சம் வெளியிய இருக்கு . ஊரில் எல்லாரும் காற்று உள்ளது அதான் அப்படி இருக்குது என்று சொன்னார்கள் . பெரியவள் ஆகும் பொழுது தொப்புள் அமுங்கி விடும் என்று சொல்லுகிறார்கள் .என் மகளுடையிய தொப்புள் எல்லாரயும் போல் இருக்க என்ன செய்யலாம் ?. அவளுக்கு எதுவும் பிரச்சினை வருமா ? வீட்டு வைத்தியம் உள்ளதா.

//ஊரில் எல்லாரும் காற்று உள்ளது அதான் அப்படி இருக்குது // நிச்சயம் அது அல்ல காரணம். காற்று... சுவாசத் தொகுதியில் இருக்கும். சமிபாட்டுத் தொகுதியிலும் இருக்கும். இருந்தாலும், தொப்புள் கை, கால் போல ஒரு உறுப்பு அல்ல. வெறும் அடையாளம் மட்டும்தான். அங்கே காற்று தங்க இடமும் இல்லை. குடல் அந்த இடைவெளியில் இறங்கலாம்.
//பெரியவள் ஆகும் பொழுது தொப்புள் அமுங்கி விடும்// பூப்படைவதைச் சொல்கிறார்களா? அப்படியானால் நிச்சயம் இல்லை. ஆண் குழந்தைகளிலும் இப்படி இருக்கும். சாதாரணமான குழந்தை வளர்ச்சியோடு வேண்டுமானால் மெதுவாக மறைந்துவிடலாம். மறையாமல் அப்படியே இருக்கவும் கூடும். குழந்தை பிறந்து தொப்புள்கொடி விழுந்ததன் பின் குளிக்க வைக்கும் போது மெதுவே உள்ளே அழுத்துவார்கள், பார்த்திருக்கிறேன்.

மூன்று வயதாகிவிட்டது. எப்போதாவது டாக்டரிடம் இது பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? //அவளுக்கு எதுவும் பிரச்சினை வருமா?// சொல்லத் தெரியாது எங்களுக்கு. டாக்டர்தான் சொல்ல வேண்டும் அதை. //வீட்டு வைத்தியம் உள்ளதா.// முதல்ல காட்டுங்க. அது அம்ப்ளைக்கல் ஹர்னியா இல்லை என்பதை நிச்சயம் செய்து கொள்ளுங்கள். (என் மருமகன் ஒருவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அம்ப்ளைகல் ஹர்னியா சர்ஜரி செய்தார்கள்.) இல்லை என்றால் பிறகு வீட்டு வைத்தியம் பற்றி யோசிக்கலாம்.
ஹர்னியா இருந்தாலும் திருத்தாமல் வருஷங்களை ஓட்டிரலாம். பாப்பா வயிற்றை வலிக்குது என்றால், சரியான காரணம் புரியாமல் கொடுத்த உணவைச் சந்தேகப்படுவீங்க. இன்னொரு வீட்டு வைத்தியத்தைத் தேடுவீங்க. குழந்தை பாவம். இவங்க பெண்குழந்தை. அழகாகத் தோன்ற வேண்டும் அல்லவா? கவனிக்காமல் விட்டால் அவங்க பெரியவங்களாகி குழந்தை உண்டாகி வயிறு பெரிதாகும் சமயம் இன்னும் அதிகமாகத் தெரியக் கூடும். பார்த்து இப்போதே திருத்தி விட்டால் நல்லது.

‍- இமா க்றிஸ்

i hav 1 year 1mnth baby boy with d same problem. i consulted even a gyneocologist and pedeatrician.both of them told us that need not worry abt that.and to wait for 5years.after that also the same prblm exists we hav to do a simple surgery.
up to that,it will not afeect the baby's health in anyway.

மேலும் சில பதிவுகள்