வேர்கடலை சட்னி

தேதி: November 11, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

வேர்கடலை - ஒரு கோப்பை
துருவிய தேங்காய் - அரைக்கோப்பை
புளி - கொட்டைப்பாக்களவு
பூண்டு - இரண்டு பற்கள்
காய்ந்தமிளகாய் - ஆறு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - இரண்டு


 

வேர்கடலையை சிவக்க வறுத்து ஆற வைத்து அதன் தோலை நீக்கிவிடவும்.
வேர்கடலையை வறுக்கும் பொழுதே காய்ந்தமிளகாயையும், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
பிறகு அரவை இயந்திரத்தில் முதலில் தேங்காய், காய்ந்தமிளகாய், புளி, பூண்டு, உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சிறிது நீரைச் சேர்த்து அரைக்கவும்.
பிறகு கடலையை கொட்டி மேலும் சிறிது நீரைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கோப்பையில் வழித்து வைத்துக் கொள்ளவும். தேவையான பதத்திற்கு நீரை ஊற்றி கலக்கிக் கொள்ளவும். சற்று கெட்டியாக இருந்தால் ருசி கூடுதலாக இருக்கும்.
ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காய வைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து சட்னியின் மீது கொட்டவும்.
இந்த சுவையான வேர்கடலை சட்னி இட்லி, தோசைக்கு ஏற்ற பக்க உணவு.


மேலும் சில குறிப்புகள்


Comments

டியர் மனோகரி மேடம் வேர்கடலை சட்னி இன்னைக்கு ரொம்ப சுவையாக இருந்தது...என் மகள் சட்டியை அப்படியே சாப்பிட்டாள் :-)

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

ஹலோ ஹாஷினி இந்த சட்னி எனக்கும் ஆல்டைம் ஃபேவரான ஒன்று. என்னத்தான் சொல்லுங்க அம்மா செய்ததுப் போல் இருக்காது தானே!, எனக்கும் அப்படி தான். உங்க செல்லமும் இந்த சட்னியை விரும்பியது மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் இருவருக்கும், மற்றும் பின்னூட்டத்திற்கும் என் மனமார்ந்த நன்றி.