அப்பகோவ இலை ரசம்

தேதி: December 6, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

அப்பகோவ இலை - 2 கைப்பிடி அளவு
தனியா - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - 4 இணுக்கு
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
வரமிளகாய் - ஒன்று
சின்ன வெங்காயம் - ஒன்று
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும். அப்பகோவ இலையை நன்றாக கழுவி, நீர் வடிந்ததும் வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து வைக்கவும். தக்காளியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
வதக்கிய இலையுடன் சின்ன வெங்காயம், வரமிளகாய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஊறிய புளியுடன், வேகவைத்த தக்காளியைச் சேர்த்து நன்கு நீர்க்க கரைத்து வடித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காயந்ததும் கடுகு தாளித்து, சின்ன வெங்காயம், வரமிளகாய் போட்டு வதக்கவும்.
அதனுடன் புளிக் கரைசல், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.
சுவையான அப்பகோவ இலை ரசம் தயார்.

அப்பகோவ இலை மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது. சளித்தொல்லைக்கு அருமருந்தாகும். இந்த இலைக்கு மணம் உண்டு, ஆனால், நறுமணம் அல்ல. ஒரு வித பிடிக்காத மணம் என்றே கூறலாம். இந்த இலையின் பெயரை எங்கள் ஊரில் இப்படித்தான் உச்சரிப்பது வழக்கம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வித்தியாசமான குறிப்பு நல்லாருக்கு. ’அப்பகோவ இலை’ கேள்விப்படாத பேரா இருக்கு. வல்லாரை கீரையத்தான் அப்டி சொல்ரீங்களா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு அருட்செல்வி,

குறிப்பு நல்லா இருக்கு. இந்தப் பெயர் கேள்விப்பட்டதில்லையே, மதுரைப் பக்கம் ‘மின்னக் கீரை’ன்னு சொல்வாங்க - அதுவாக இருக்குமோ இது?

எதை வச்சு கேக்கிறேன்னா - வித்தியாசமான மணம்னு சொல்றீங்களே - அதுனாலதான்.

அன்புடன்

சீதாலஷ்மி

பதிவிற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி :) வல்லாரைக்கீரை வேறு, இலையின் வடிவம் சிறிதளவு வேண்டுமானால் ஒத்துபோவதாக சொல்லலாம். இது கொடிவகையை சார்ந்தது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

'மின்னக்கீரை' இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன் :) மின்ன மரம் என்று ஒரு சிறு மரம் போன்ற தாவரத்தை பார்த்திருக்கிரேன். ஆனால் அதன் இலை சமையலுக்கு உகந்ததாக தெரியவில்லை.
இது கோவ இலைபோன்றே இருக்கும், அதைவிட சற்று மொடமொடப்பாக இருக்கும். இதன் கிழங்கு சிறிதாக நீள் வடிவினதாக இருக்கும்.
தங்கள் பதிவு எனக்கு உற்சாகமளிக்கிறது மிக்க நன்றி சீதாமேடம் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

என் குறிப்பினை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் டீமிற்கும் மிக்க நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருள் ஹெல்த்தியான ரசம் ஆனால் இப்படி ஒரு இலை கேள்வி பட்டதே இல்லையேப்பா :) வாழ்த்துக்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அருள்செல்வி அப்பகோவை இலை ரசம் இரண்டு முறை செய்துட்டேன். நன்றாக இருந்தது. இது வரை இந்த இலை சமைப்பாங்கனு தெரியாது. இந்த இலையை குழந்தையை குளிக்க வைக்க மட்டும்தான் பயன்படுத்தியிருக்கேன். பக்கத்து தோட்டத்தில் நிறைய இருக்கு. இனி அடிக்கடி ரசம் வச்சுருவேன். நன்றி அருள். இந்த இலையை பயன்படுத்தி வேற என்ன சமையல் செய்யலாம். தெரிந்தால் சொல்லுங்க அருள். நன்றி

சுவா கண்ணூ :) உங்களுக்கும் தெரிலயா :( சரி விடுங்க அடுத்தமுறை இலைய பறிச்சு கும்பகோணத்துக்கு பார்சல் அனுப்பிடுறேன் :)

prassan.b வாங்க:) அப்பா சாமி நீங்களாச்சும் போட்டீங்களே தெரியும்னு, நாந்தான் ஏதோ பேரு தெரியாம, அறியாம போட்டுட்டமோனு, நெட்லலாம் தொலாவிட்டு இருந்தேன். இதுக்கான ஒரு ஆராய்ச்சியே பண்ணேனா பார்த்துக்குங்களேன்!!

ஆனா ஒரு விசயம் இதனை குழந்தைக்கு மேலுக்கு பூசி குளிக்க வெப்பாங்கனு இப்பத்தான் கேள்விபடுறேன். ஒருவேளை ஆவாரம் பூவை சொல்றீங்களோ?
இதை உணவுக்குமட்டுமே பயன்படுத்தி இருக்காங்கனுதான் எனக்கு தெரியும்.

கொடி போல படர்ந்து கிடக்கும். இதைத்தான் சொல்றீங்களா?
இதில அடுத்த குறிப்பு கண்டிப்பா போடுறேன். தங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி தோழி :) ( உங்கபேர் என்னனு எனக்கு சரியா தெரில,தெரிஞ்சுக்கலாமா? காப்பி, பேஸ்ட் பண்ணேணூ, தவறா நினைக்காதீங்க)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அருட்செல்வி சந்தேகமே இல்லை இதே இலைதான் நான் சொன்னதும். பக்கத்து வீட்டு அக்கா தான் இந்த இலையை எனக்கு அறிமுகம் செய்தது.என் குழந்தைக்கு சின்ன stomach ப்ரொப்லெம் வந்தது.அப்போ தான் இந்த இலை ஆவாரம்பூ,திருநீற்றுபச்சை,மாசுபத்தினி,மஞ்சள் எல்லாம் சேர்த்து அரைத்து குளிப்பாட்ட சொன்னாங்க. குழந்தைக்கு நல்லது சளி,காய்ச்சல் போன்ற தொந்தரவும் வராதுனு சொன்னாங்க. அடிக்கடி குழந்தைக்கு தேய்த்து குளிப்பாட்டுவேன். உங்க குறிப்பை பார்த்துதான் சமைப்பாங்கனு தெரிஞ்சுகிட்டேன்.வீட்டில் எல்லோருக்கும் பிடிச்சிருக்கு பா.ஹெல்தியான ரசம் வைக்க கத்துகிட்டேன் உங்கள் மூலமாக. நன்றி.எனது பெயர் தாரளமா நீங்க தெரிஞ்சுகலாம். பிரசன்னா

appakova ilai enga area side ethavathu koppalam vantha manjal oda araichu kalanthu poduvanga quick ah cure aaidum.keerai mari seivanga..but rasam ippathan kelvi padaren.. super akka..

அப்பக்கோவா இலை தான் சரியான‌ பெயர்.
ஆங்கிலத்தில் "Kedrostis Rostrata" என்று சொல்வார்கள்.

These leaves are called "Appakovathalai" in Tamil. They are edible. We cook them with lentils and eat it with rice. This plant is a creeper and the leaves have a very strong distinctive smell. That is one of the reasons, these leaves are cooked along with lentils, as the lentils mask the strong smell. This plant has bright red fruits, which unfortunately I couldn't picture. We use these leaves to cure boils (abscess) that form during the hot seasons. During the hot summer months, our sweat glands are very active, making it ideal for the bacteria to grow. The appakovay leaves are very cooling and they are crushed together with small onions (shallots) and then applied over the boils. This paste gives good relief from the boils. The only thing to note is that the leaves and onions shouldn't be crushed too fine, as all the juice will flow down when you apply it over the boils.