avasaram

avasaram uthavungal.... en thoziyin pendrive tholainthuvittathu... athil thirumana videokkal ullathu...itu yaar kailaavathu kidaithaal vibareetham erpada vaaipullathaa

என்ன மாதிரியான விபரீத வாய்ப்புகள்

1. வீடியோ எடிட்டிங் தெரிந்தவன் கையில் கிடைத்தால், மணமகன், மணமகளை மாற்றம் செய்து வீடியோ தயாரிக்கலாம். அவனே கொஞ்சம் ரவுடியாக இருந்தால், அந்த வீடியோவைக் காட்டி ஏதேனும் ஒரு தரப்பை மிரட்டலாம்.

2. ஒரு கிட்நாப் செய்பவன் கையில் கிடைத்தால், குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் விபரம் அவனுக்கு தெரிய வரும். யாரையேனும் கடத்துவதற்கு அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

3. கொள்ளைக்காரன் கையில் கிடைத்தால், அதில் உள்ளவர்கள் அணிந்துள்ள நகை விபரங்கள் தெரிந்து அந்த தகவல்களை தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்வான்.

4. முன்னாள் காதலன்/காதலி கையில் கிடைத்தால், எங்கேனும் ஒரு தற்கொலை நடக்கலாம்.

5. கொஞ்சம் இதயம் பலஹீனமானவன் கையில் கிடைத்தால், வீடியோவில் உள்ளவர்களின் மேக் அப்பை பார்த்து அட்டாக் வந்து இறக்கலாம்.

6. கொஞ்சம் நல்லவர்களின் கையில் கிடைத்தால், எடுத்துப் பார்த்து, இருப்பவர்களை அடையாளம் கண்டு, அந்த ட்ரைவை எப்படியாவது திருப்பி கொடுக்க நினைக்கலாம்.

கடைசியாக என்னை போன்ற சராசரிகளின் கைகளில் கிடைத்தால், எடுத்து கம்ப்யூட்டரில் போட்டு, வைரஸ் ஸ்கேன் செய்து, பார்மேட் செய்து, பிடித்த பாடல்களை ரெக்கார்டு செய்து, கிடைத்தவரைக்கும் லாபம் என்று தொலைத்தவருக்கு மனதார நன்றி சொல்லலாம். :-)

ம்ம்ம்.. வரவர அறுசுவையில எதுக்கெல்லாம் அவசரம் போட்டு கேள்வி கேட்கணும்னு ஒரு வரைமுறையே இல்லாம போச்சு... :-(

tholaithathu naan... athil en thoziyin thangaigal ullanar... avargalukku thirumanam aagavillai... avarkalukku ethenum paathippu erpatuma enru ketten ...plese reply me

மேலும் சில பதிவுகள்