வாழைக்காய் சட்னி

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நடுத்தரமான வாழைக்காய் - 2
மிளகாய்த்தூள் - முக்கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைகேற்ப


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வாழைக்காயை முக்கால் அளவு வேக வைத்து தோலை உரித்து விடவும்.
பிறகு சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த காயுடன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, தேங்காய்த் துருவலை வைத்து அரைக்கவும்.
அரைத்த பின்பு எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றை பிழிந்து பறிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்