பட்டர் சிக்கன்

தேதி: November 12, 2006

பரிமாறும் அளவு: 6நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிக்கன் - ஒரு கிலோ
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
பச்சைமிளகாய் - நான்கு
பெரிய தக்காளி - நான்கு
பெரிய வெங்காயம் - ஒன்று
வெண்ணெய் - கால் கோப்பை
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பாதாம் பருப்பு - ஒரு பிடி
பால் - அரைக்கோப்பை
கரம் மசாலா - இரண்டு தேக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
தந்தூரி பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - மூன்றுதேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
கெட்டியான க்ரீம் - இரண்டு மேசைக்கரண்டி


 

கோழித்துண்டுகளை நன்கு கழுவி ஈரம் போக நன்கு ஒத்தி எடுக்கவும்.
வெங்காயத்தை நொறுங்க நறுக்கி வைக்கவும். தக்காளியை வில்லைகளாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் சுண்ட வதக்கி வைக்கவும்.
பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் ஊற வைத்து பாலைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு பச்சைமிளகாயை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதில் ஒரு தேக்கரண்டி விழுதை தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு தந்தூரி பவுடர், ஒரு தேக்கரண்டி உப்புத்தூள், எடுத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது, மற்றும் எலுமிச்சைரசத்தையும் சேர்த்து கோழித்துண்டில் சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அவனில் 400 டிகிரி F ல் வைத்து கோழித்துண்டுகளை கிரில் செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு வாயகன்ற அடிகனமான சட்டியை காயவைத்து எண்ணெயையும் வெண்ணெய்யையும் போட்டு சூடாக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வறுக்கவும். பிறகு இஞ்சி பூண்டு கலவையை போட்டு வதக்கவும். அடிபிடிக்காமல் தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி விழுதைப் போட்டு வதக்கி எல்லாத்தூளையும் போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கொதித்தவுடன் கோழித்துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி விட்டு உப்புத்தூளை போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு பாதாம் விழுதை சிறிது நீரைச் சேர்த்து கலக்கி மசாலாவில் ஊற்றி நன்கு கலக்கி அடுப்பின் அனலை மிகவும் குறைத்து வைத்து வேகவிடவும்.
மசாலா நன்கு வெந்து கெட்டியான பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
பரிமாறும் முன் இரண்டு மேசைக்கரண்டி கெட்டியான கிரீமை மேலாக ஊற்றி கொத்தமல்லியை தூவி சூடாக பரிமாறவும்.


கோழியை முதல் நாளே கிரில் செய்து வைத்துக் கொண்டால் மற்ற நாளைக்கு மசாலாவை மட்டும் தயாரித்து பட்டர் சிக்கனை சுலபத்தில் செய்து விடலாம். காரம் குறைவாக இருக்க வேண்டுமென்றால் அரைக்கோப்பை கிரீமைச் சேர்த்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலோ மனோதரி மேடம் .
முதன் முறையாக உங்களுடன் பேசுகிறேன். நீங்கள் யாரிடம் பேசும் பொழுதும் ரொம்ப தெரிந்தவர் போல அன்புடன் பேசுவதை பார்த்து ஆச்சரியமாக இருக்கும்.
என்னுடைய சந்தேகத்தையும் தீர்க்கவும்.
பட்டர் சிக்கன் செய்யும் போது சிக்கனை கிரில் செய்யாமல் செய்யலாமா ? என்னிடம் கிரில் ஓவன் இல்லை...வேறு மாற்று முறை என்ன?

Jaleela Kamal

பட்டர் சிக்கனுக்கு ஊறிய சிக்கனை எண்ணையில் பொரித்தும் போடலாம். மனோகரிடம் திட்டதிங்கோ அவசரகுடுக்க என்று.
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள மனோஹரி ச்சேச்சி

உங்களது பட்டர் சிக்கன் செய்து பார்த்தேன் இன்று மாலை..பரோட்டாவுடன் மிகவும் அருமையாக இருந்தது.
நான் க்ரில் செய்யவில்லை லேசாக பட்டர் சேர்த்து வதக்கி வதக்கியே வேக வைத்தேன்.முன்பு நான் வாங்கி சாப்பிட்ட பட்டர் சிக்கனை விட அருமையாக இருந்தது. வளரே அதிகம் நன்னியுண்டு..

ஹலோ தளிகா எப்படி இருக்கீங்க?கொச்சி மோள் எங்கன உண்டு?இந்த சிக்கன் குறிப்பை செய்து பார்த்தற்கும் பின்னூட்டம் அனுப்பியதற்கும் மிக்க நன்றி. சிக்கனை கிரில் செய்யாமலே சுவையாக சமைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.அடுத்த முறை செய்தால் கட்டாயம் கிரில் செய்த கோழித் துண்டுகளில் செய்து பாருங்கள் நிச்சயம் இன்னும் நன்றாக இருக்கும் ஏனெனில் பட்டர் சிக்கனுக்கு சவாலாக அமைவதே அதன் கிரேவி தான் ஆகவே சிக்கனை நன்கு கிரில் செய்து ட்டிரையாக சேர்ப்பதால் அதன்ட கிரேவியும் அஸ்ஸலாய் இரிக்கும் கேட்டோ, பின்னே.....மோள் நாட்டிலேக்கு போகாம் போனா?எந்தா விஷேஷம் அல்ல வெர்தே வெக்கேஷனானோ? இவ்விடே ஃபாரம்மில் எவ்விடையோ வாயுச்சு, கொழப்பமுட்டெங்க்கில் மோள் பரயேன்டா கேட்டோ.ஒகே டியர் பின்ன காணாம் நன்னி.

சகோதரி ஜலிலா அவர்களுக்கு விரைவாக வந்து சகோதரிக்கு பதில் அளித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி.

ஹலோ RSMV உங்கள் பதிவிற்கு பதில் எழுதாமல் விடுபட்டுள்ளதற்கு மன்னிக்கவும், நான் பதிலளிக்கா விட்டாலும் நமது சகோதரி ஜலீலா உங்களுக்கு பதிலளித்துள்ளது நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருந்திருக்கும் என்று நம்புகின்றேன்.பட்டர் சிக்கனுக்கு கோழி இறைச்சியை பச்சையாக சேர்ப்பதற்கு பதில் அதனை வேகவைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது சகோதரி கூறியதுப் போல் பொரித்தும் தான் சேர்க்க வேண்டும். ஏனெனில் அப்படியே சேர்ப்பதால் இறைச்சியில் உள்ள நீர், கிரேவியின் ஒரிஜினலான சுவையை மாற்றிவிடும் சரியா நன்றி.

உங்க சிக்கனை இன்று செய்தேன் ரொம்ப டேஸ்ட் அருமையாக இருந்தது ரொம்ப தேங்ஸ்..தளியும் நீங்கமும் பேசுக்குறதை பார்த்தா கொஞ்சத்தை தவிர மற்றதெல்லாம் எனக்கு ஒன்னுமே புரியல ஏதோ பினாத்துற மாதுரி இருக்கு தலை சுற்றுது :-)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

hello madame manohari,
how are you? i see your all recipes and i have tried some its is very delicious. and i want to know in the recipes of butter chicken you have specified green chillys but you have not marked where we have to add. can you tell me?
bye
preetha

அன்புச் சகோதரி மர்ழியா எப்படி இருக்கீங்க தாமதமான பதிலுக்கு வருந்துகின்றேன், தாங்களும் இந்த குறிப்பை செய்து சுவைத்தது மகிழ்ச்சியைத் தந்தது பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.

அன்புச் சகோதரி பிரீத்தா எப்படி இருக்கீங்க? உங்களுடைய பின்னூட்டத்தின் தாமதமான பதிலுக்காக வருந்துகின்றேன். இந்த குறிப்பில் சேர்க்கப்படும் பச்சைமிளகாயை இஞ்சி பூண்டுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதை நான்காவது வாக்கியத்தில் கொடுத்துள்ளேன், இதனால் சிக்கனிலும் கிரேவியிலும் கொஞ்சம் எக்ஸ்ரா காரச்சுவையுடன் நன்றாக இருக்கும் ஒகேவா. நன்றி.

Dear Manohari Madem,
I am going to try this butter chicken curry today.But i don't know about the cream. What is that? Could u pls explain this.
Thank You.

அன்புச் சகோதரி சங்கீ விஜய் எப்படி இருக்கீங்க? நிச்சயம் இந்த குறிப்பை செய்து பாருங்க. இதில் சேர்க்கப்படும் கிரீம் என்பது பாலேடு கேள்விப்பட்டிருப்பீர்கள் அது தான். இதை விருந்துகளில் ஒரு ரிச்னெஸ்காகத் தான் அலங்காரமாக சேர்ப்பார்கள் மற்றபடி அன்றாட சமையலுக்குத் தேவையில்லை. ஆகவே கட்டாயம் இந்த குறிப்பைச் செய்துபார்த்து எப்படி இருந்தது என்று தெரிவிக்கவும் சரீங்களா, நன்றி.

சிக்கன் துண்டுகளை முதல் நாளே கிரில் செய்து ஃபிரிட்ஜ்ஜில் வைக்க வேண்டுமா அல்லது ஃப்ரீசரில் வைக்க வேண்டுமா? தயவுசெய்து பதில் அளிக்கவும். நன்றி!

ஹலோ சாய் கீத்தா இந்த குறிப்பில் சேர்க்கும் சிக்கனை ஒரு நாள் முன்பு கிரில் செய்து சாதாரணமாக ஃபிரிட்ஜில் வைத்தால் போதும் தைரியமாக அடுத்த நாள் எடுத்து பட்டர் சிக்கன் செய்யுங்க சரீங்களா. ஃபிரீசரில் வைக்க வேண்டாம். குறிப்பை செய்து பார்த்துவிட்டு எப்படி வந்ததென்று கூறவும்.நன்றி.

பதிலுக்கு மிக்க நன்றி!. இன்றுதான் பட்டர் சிக்கன் செய்ய தேவையான பொருட்களை எடுத்து வைத்துள்ளேன். செய்து பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்கிறேன். அன்புடன் சாய் கீதாலஷ்மி!

திருமதி. மேனகா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து தயாரித்த பட்டர் சிக்கனின் படம்

<img src="files/pictures/butterchick.jpg" alt="picture" />

அய்யோ அக்கா ஒன்னு இருந்தா ஒன்னு இருக்க மாட்டீங்குது,அவசியம் கிரிம் வேனுமா?போடாமல் செய்தால் நல்லா தானே இருக்கும்

தந்தூரி பவுடரும் இல்லை,அதுவும் அவசியம் போடனுமா?
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நன்றி மேனகா இந்த குறிப்பை படத்தில் பார்ப்பது சந்தோசமாக உள்ளது, மிகவும் சுவையாக சமைத்திருக்கின்றீர்கள் பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகின்றது பராட்டுக்கள். படத்தை வெளியிட்ட அட்மினுக்கும் என் நன்றி.

டியர் ரேணுகா பட்டர் சிக்கனை கிரீம் இல்லாமலும் செய்யலாம், ஆகவே அதைப் பற்றி கவலைப் படாமல் செய்துபார்த்துவிட்டு சொல்லுங்க.

அக்கா தந்தூரி பவுடரும் இல்லை.அதற்கு பதில் சொல்லுங்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அப்படீங்களா பரவாயில்லை, அரைத்த விழுதுடன் மிளகாய்பொடி மஞ்சபொடி, கொஞ்சம் கரம்மசாலாவைச் சேர்த்து கிரில் செய்துவிடுங்க. சிக்கனை கட்டாயம் கிரில் செய்து மசாலாவில் சேர்ப்பது தான் பட்டர் சிக்கனின் சுவையை அதிகரிக்கும், தைரியமாக டிரை செய்து பாருங்க. சாரி டியர் விரைவாக பதில் அனுப்ப முடியவில்லை பக்கங்களை திருப்ப அதிக நேரமெடுக்கின்றது.

அப்படி என்றால் ஓகே,நான் நாளை அல்லது நாளை மறுநாள் செய்து விட்டு சொல்கிறேன்,மிகவும் நன்றி தங்களின் உடனடி பதிலுக்கு

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

படம் இணைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணா!!!

மேம் நான் இன்று தங்கள் பட்டர் சிக்கன் குறிப்பினை செய்தேன்.க்ரீம் சேர்க்காமல் செய்தேன்.ரொம்ப நன்றாக இருந்தது.நன்றி மேம்!!

ஹலோ மேனகா நீங்க இந்த குறிப்பை செய்து பார்த்து நன்றாக இருந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.

Dear Madem,
i tried your butter chicken.came out very well.thanks for sharing ur recepies with us.thanks a lot