தயிர் வடை

தேதி: November 12, 2006

பரிமாறும் அளவு: 6-7நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுத்தம்பருப்பு - ஒன்றரை கோப்பை
தயிர் - மூன்று கோப்பை
பச்சைமிளகாய் - மூன்று
இஞ்சி - அரைத்துண்டு
துருவிய தேங்காய் - கால்கோப்பை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - இரண்டுதேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
காய்ந்தமிளகாய் - இரண்டு
உப்புத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி


 

உளுத்தம்பருப்பை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு நீரை வடித்து விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி உப்புத்தூளும், ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவும் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
இஞ்சி, பச்சைமிளகாய், தேங்காய் துருவலைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு சட்டியில் எண்ணெயை காயவைத்து உள்ளங்கையில் தண்ணீரை தடவிக் கொண்டு மாவு கலவையில் சிறிது எடுத்து வைத்து வடையாக தட்டி அதன் நடிவில் ஒட்டை போட்டு எண்ணெயில் போடவும். வடையை சுட்டவுடன் உடனே சுடு தண்ணீரில் போட்டு பத்து நிமிடம் ஊறவைத்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
இதைப் போல் எல்லமாவையும் வடையாக சுட்டு ஊறவைத்து வைக்கவும்.
பிறகு வடையில் உள்ள தண்ணீரை சொட்ட பிழிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு தயிரில் பாதியை அதன் மீது ஊற்றி கலக்கி குளிர்சாதன பெட்டியில் இரண்டு மணி நேரம் வைத்து விடவும்.
பிறகு உப்புத்தூள், அரைத்த விழுது ஆகியவற்றை மீதியுள்ள தயிரில் கலந்து ஒரு சிறிய சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயில் தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து தயிரில் கொட்டி நன்கு கலக்கி விடவும்.
இதனை தயிரில் ஊறும் வடையின் மீது ஊற்றி நறுக்கிய கொத்தமல்லியை தூவி அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்