கோழி குருமா

தேதி: January 4, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கோழி - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 4
முந்திரி - 10
கசகசா - 2 தேக்கரண்டி
தேங்காய் - 4 துண்டுகள்
தயிர் - ஒரு கப்
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
மல்லித் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
ஃபான்டன் இலை - சிறிது
கொத்தமல்லித் தழை - சிறிது
எலுமிச்சை - பாதி
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு


 

கோழியை சுத்தம் செய்து கொள்ளவும். முந்திரியுடன் கசகசா மற்றும் தேங்காயைச் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைக்கவும். ஒரு வெங்காயத்துடன் 2 மிளகாயைச் சேர்த்து ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
சுத்தம் செய்த கோழியுடன் அரைத்த வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, முந்திரி விழுது, தயிர், கரம் மசாலா, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி சற்று நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பான்டன் இலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் பிரட்டி வைத்துள்ள கோழிக் கலவையை ஊற்றி, மேலே கொத்தமல்லித் தழை போட்டு மூடிவைத்து வேகவிடவும். முந்திரி சேர்த்திருப்பதால் அடிபிடிக்கக்கூடும். எனவே அவ்வப்போது கிளறிவிடவும். கடைசியில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
கோழி வெந்த பின்பு அடுப்பை சிம்மில் வைத்திருந்து சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைக்கவும். நெய் சாதம் மற்றும் பரோட்டாவுக்கு ஏற்ற சுவையான கோழி குருமா தயார். மேலே சிறிது எண்ணெய் விட்டால் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Chicken kuruma super ..oru naal tri panarom pa

Be simple be sample

Sha naanum panni parkiran

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே