சிறுபயறு துவையல்

தேதி: November 13, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறுபருப்பு - 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
பூண்டு - 1 பல்
புளி - 1 நெல்லிக்காயளவு
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளவத்தல், பூண்டு, புளி இவற்றை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
அந்த எண்ணெயில் கறிவேப்பிலை, தேங்காய் துருவலை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்
அதன் பின் எண்ணெய் இல்லாமல் வெறும் சட்டியில் சிறுபருப்பை போட்டு சிவக்க வறுக்கவும்
அனைத்தையும் உப்பு வைத்து அரைத்தால் துவையல் ரெடி


மேலும் சில குறிப்புகள்


Comments

பிரபா, சிறு பயிறு துவையைலை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேஷன். நன்றி உங்களுக்கு