cholesterol அதிகமானதால்....

அனைத்து அறுசுவை நேயர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் ...

cholesterol அதிகமானதால்.....நான் இப்பொழுது diet டில் இருக்கின்றேன்.... காலை உணவாக oats.....இரவு பழங்கள்
எடுத்து வருகிறேன் .....மத்திய உணவாக எதை எடுப்பது என்று தெரியவில்லை ...

அரிசிக்கு மாற்றாக ஏதாவது உணவு உங்களுக்கு தெரிந்தால் தெரிவியுங்கள் ..
வயிறு நிறைந்த உணர்வையும் தர வேண்டும்...சீக்கிரம் பசி எடுக்காமலும் இருக்க வேண்டும்...சத்தான உணவாகவும் இருத்தல்
வேண்டும்....

நீங்கள் எதற்க்காக அரிசி சேர்ப்பதில்லை என்பது எனக்கு தெரியவில்லை,
தாராளமாக ஒரு கப் சாதம் மதியம் சேர்த்துக் கொள்ளலாம்.அத்துடன் கண்டிப்பாக சாலட் வகைகளை உண்பது நல்லது,ஏனென்றால் வேகவைத்த காய்கறிகளை விட சாலடில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது,கூடவே ஒரு கப் முளை கட்டிய தானிய வகைகளையும் உண்பதால் சீக்கிரம் பசிக்காது.ப்ராக்கோலியை ஆவியில் வேகவைத்து (அரை வேக்காடு) உண்ணலாம்.ஒமெகா 3(omega 3) அதிகம் உள்ள மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்,கீரைகள் உண்பதும் நல்ல பலன் தரும்
ஓட்ஸ் நார்ச்சத்து நிறந்த உணவு தான்,கம்பிலும்(கம்பம் புல்)நார்ச்சத்து அதிகம் உள்ளது,
பழங்கள் போர் அடித்து விட்டால் இரவில் காய்கறி சூப் செய்து அருந்தலாம்.

நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்ப்பதால் இரத்தத்தில் அதிகப் படியான சர்க்கரை மற்றும் கொழுப்புக்கள் சேராமல் தடுக்கிறது.

தானியங்களை முளை கட்டுவது எப்படி என்று தெரியவில்லை...
அருசுவையுளும் தேடி பார்த்தேன்...தகவல் இல்லை...
சூப் அனைத்துமே oil சேர்பதால் அதை தவிர்குறேன்...

தானியங்களை முளை கட்டுவது எப்படி என்று தெரிந்தால் சொல்லுங்கள்.. plz

வாழ்க்கையில் இரண்டு வாய்ப்புகள் உள்ளது. ஒன்று உன்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை மாற்றிக்காட்டுவது.

சூப்பில் எண்ணெய் சேர்க்க தேவையில்லை,தேவையான காய்கறிகளை வேக வைத்து அதை அப்படியே பருகலாம்,
ஆலிவ் எண்ணை ஸ்பிரே(Oil spray) என்று கிடைக்கும்,குழம்பு வகைகளுக்கு எண்ணைக்குப் பதில் அதை உபயோகிக்கலாம்,

தானியங்கள் முளை கட்டுவதற்க்கு:
ஏதேனும் ஒரு தானியத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து விட வேண்டும்,மறு நாள் காலையில் நீரை வடித்து விட்டு ஓறு காற்று புகாத டப்பாவில்(Air tight container)பொட்டு இறுக்கமாக மூடி வைத்து விடவும் 24 மணி நேரம் கழித்து திறந்தால் தானியம் முளைத்திருக்கும்.
அதைப் போல் ஊறிய தானியத்தை நீரை வடித்து விட்டு ஒரு மெல்லிய ஈர துணியில் கட்டி தொங்க விடலாம்,24 மணி நேரத்தில் இதுவும் முளைக்கும்

மேலும் சில பதிவுகள்