பட்டு பிளவுசில் வேர்வை கறை

பட்டு பிளவுசில் உள்ள வேர்வை கறையை எப்படி போக்குவது? பிளவுசில் வைப்பதற்கான sweat pad சென்னை அல்லது திருநெல்வேலியில் எங்கு கிடைக்கும்?

பட்டு பிளவுஸில் வேர்வைக் கறை போக தண்ணில கொஞ்சம் ஷாம்பூ கலந்து, ஒரு காட்டன் துணிய அதுல நனைச்சு ப்ளவுஸ்ல வேர்வைக் கறை உள்ள இடத்துல அந்த துணியால துடைச்சுட்டு கொஞ்ச நேரம் காயவையுங்க. இதேமாதிரி 2 அல்லது 3 முறை துடைச்சு காயவையுங்க..

Sweat pad பற்றி தெரிஞ்ச தோழிகள் சொல்வாங்க. வெயிட் பண்ணுங்க கிருத்திகா...

கலை

ஹாய் கலை, எனக்கு இந்த கேள்வி கேட்கனும்னு இருந்துச்சு கிருத்திக்கா கேட்டுட்டாங்க, நிச்சயம் நீங்க சொல்லி இருக்கற ஐடியா எனக்கும் பயன்படும், செய்து பார்க்கறேன்.
பட்டு புடவை ப்ளாவுஸ துவைக்க முடியாம அதோட போட்டுக்கவும் முடியாம கஷ்டமா இருந்துச்சு ஒரு ப்ளவுஸ் துவச்சு அது வீணாவே போய்ட்டு. இனிமே இத ட்ரை பண்றேன்

ரொம்ப நன்றி கலை.. கண்டிப்பாக நிறைய பேருக்கு பயனுள்ள தகவலா இருக்கும்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

மேலும் சில பதிவுகள்