சிக்கன் ரோஸ்ட்

தேதி: January 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

சிக்கன் - அரை கிலோ
தக்காளி ப்யூரி - 2 தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தக்காளி - கால் கிலோ
குடைமிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித் தழை
உப்பு


 

முதலில் சிக்கனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை நறுக்கி வைக்கவும்.
ஊறவைத்த சிக்கனுடன் தூள் வகைகள் சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.
அதனுடன் தக்காளி ப்யூரி சேர்த்து மீண்டும் வேகவிடவும்.
பிறகு வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வேகவிடவும்.
சிறிது எண்ணெய் விட்டு நன்கு சுருள வேகவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான சிக்கன் ரோஸ்ட் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முசி கலர்ஃபுல் சிக்கன் ரோஸ்ட் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் முசி.சூப்பர் சிக்கன் . பார்க்கும்போதே நல்லாருக்கு

Be simple be sample

Pakka supera irrukku. seithu parthidu solren

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜலக்ஷ்மி சுரேஷ்குமார்

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி,சுவர்ணா.
நன்றி,ரேவதி.
மிக்க நன்றி,செய்து பாருங்க ராஜலக்ஷ்மி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Musi,
சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு சுலபமாகவும் மிக சுவையாகவும் இருந்தது... மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வாழ்த்திர்க்கும்,பதிவிர்க்கும் மிக்க நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.