நெல்லிக்காய் தயிர் பச்சடி

தேதி: January 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (5 votes)

 

நெல்லிக்காய் - 2
பச்சை மிளகாய் - 2
தேங்காய்
தயிர் - அரை கப்
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயப் பவுடர் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
தேங்காயை சிறிய துண்டுகளாக்கவும். (அல்லது துருவிக் கொள்ளலாம்). நெல்லிக்காயிலுள்ள விதையை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
மிக்ஸியில் நெல்லிக்காயுடன், தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அரைத்த விழுதை தயிரில் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதனுடன் பெருங்காயத்தைப் பொரியவிடவும். விரும்பினால் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துக் கொள்ளலாம்.
தாளித்தவற்றை தயிர்க் கலவையில் சேர்த்து கலக்கவும். சுவையான நெல்லிக்காய் பச்சடி தயார்.

நறுக்கிய நெல்லிக்காய்த் துண்டுகளை எண்ணெயில் நன்றாக வதக்கி ஆறியதும் சேர்த்து அரைக்கலாம். தயிரில் சேர்க்காமல் கொஞ்சம் கூடுதலாக தேங்காய் சேர்த்து தாளிதத்தையும் சேர்த்து அரைத்து எடுத்து, நெல்லிக்காய் துவையலாகவும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

wow super recipe

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ராஜலக்ஷ்மி சுரேஷ்குமார்

நெல்லிக்காய் பச்சடி சரியான நேரத்தில் சொல்லி இருக்கீங்க நிறைய இங்க கிடைக்குது. நன்றி சீதா. செய்துட்டு சொல்றேன்

சீதாம்மா, நல்ல குறிப்பு, எனக்கு நெல்லிக்காய் ரொம்ப பிடிக்கும். வாழ்த்துக்கள் சீதாம்மா..:)
//தேவையான பொருட்களில் தேங்காயையும் சேர்த்துவிடுங்கள் ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

செய்தாச்சு செய்தாச்சு சாப்பிட்டும் பார்த்தாச்சு நல்லா இருக்கு, சாதத்துடன் சாப்பிட்டோம் நல்லா இருந்துது நைட் இட்லியோட சாப்பிட போறேன். நன்றி சீதா

அன்பு ராஜலஷ்மி,

வருகைக்கும் முதல் பதிவிற்கும் மிகவும் நன்றி.

அன்பு சுமிபாபு,

வாழ்த்துக்களுக்கு நன்றி. தேங்காய் – இப்ப சேத்தாச்சுப்பா, நன்றி.

அன்பு உமாகுணா,

செய்து பார்த்து பதிவிட்டது மிக்க மகிழ்ச்சி. இட்லிக்கும் நன்றாகவே இருக்கும் இது.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாமா நெல்லிக்காய் பச்சடி இப்பதான் கேள்வி படறேன் சூப்பர்மா

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நெல்லிக்காய் பச்சடி அருமை :)
வாரம் ஒரு பாக்கெட் நெல்லிக்காய் வாங்கிவிடுவோம், அதை சட்னி, குழம்பு என ஒளிச்சுவைத்து போட்டால்தான் உள்ளேயே போகும் எங்கள் வீட்டு குட்டீஸ்க்கு,
இனி பச்சடி லயும் போட்டு அசத்திப்புடுறேன் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

//எங்கள் வீட்டு குட்டீஸ்க்கு..//

எக்ஸ்கியூஸ் மி.. !! :-)

என்னவர் அருகம்புல் ஜூஸையே , ரசிச்சு ருசிச்சு குடிப்பார். வாரம் ஒருக்கா ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்து வைட்டமின் சி ய அப்பிடியே சாப்பிடுனு சொல்ரவருக்கு,
இதையெல்லாம் கண்டாலே ஆகாதுனு சொல்ற குட்டீஸ், இதில நானும் சேர்த்தி... குட்டீஸ்... என் குட்டீஸ், டில்லிக்கு ராசானாலும் எனக்கு குட்டீஸ்தாங்ணா :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அன்பு ஸ்வர்ணா,

பச்சடி மட்டுமில்லை, துவையல், ஊறுகாய் எல்லாம் செய்யலாம். ரொம்ப நல்லா இருக்கும்.

நெல்லிக்காயைப் பொறுத்த வரையில், பச்சையாகவோ வதக்கியோ அல்லது காய வைத்தோ - எப்படி செய்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் அப்படியே இருக்குமாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருட்செல்வி,

குட்டீஸ்க்கு(!) அவசியம் செய்து குடுங்க, சரியா.

அன்புடன்

சீதாலஷ்மி

இது பெரிய நெல்லி or சிறிய நெல்லி காயா Mom.,,,,

பெரிய நெல்லிக்காய் தான் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா