4 year baby poor eater

ஹலோ தோழிகளே
என் மகளுக்கு நான்கு வயதாகிறது. பால் தவிர எதையும் விரும்பி உண்பதில்லை. பள்ளி செல்லும் நாட்களில் சோர்ந்து விடுகிறாள். எப்படி உண்ணப் பழக்குவது?
உதவுங்களேன் please

நீங்கள் உங்கள் மகளுக்கு காலையில் 6 மணிக்கு பால் கொடுங்கள் பின்பு 8 மணியலவில் காலை உணவு இட்லி அல்லது பொங்கல் அல்லது அவளுக்கு எது பிடிக்குமோ அதை செய்து கொடுங்கள்.
அவளுக்கு வேடிக்கை காட்டி அல்லது விளையாட்டு காண்பித்து கட்டாயமாக காலை உணவு கொடுக்க வேண்டும். காலை பால் கொடுக்கும் போது அந்த பாலில் ஹெல்த் டிரிங் அதாவது ஹார்லிஸ் கலந்து கொடுக்க வேண்டும். இல்லை யென்றால் பழச்சாறு கண்டிப்பாக மதியானம் கொடுக்கலாம். கொஞ்சம் சோர்வு இல்லாமல் இருப்பாள்.

சங்கீதா சேம் பின்ச் அதே தான் இங்கயும், ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன், கலர்புல்லா செய்து கொடுங்க, அவளுக்கு பிடிச்சத செய்து கொடுங்க, நீங்க சாப்பிடும் போதோ வீட்டில் எல்லாரும் சாப்பிடும் போதோ அவளையும் கூட வச்சு அவளுக்கு ஒரு தட்டு கொடுத்து சாப்பிட வைங்க, இன்னக்கு என்ன சாப்பிடுற இது செய்யலாமா அது செய்யலாமான்னு அவ கூட டிஸ்கஸ் பண்ணி முடிந்தால் அவள உங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கூட வச்சுகிட்டு செய்ங்க, (பெரிய சமையல்லாம் இல்ல சின்ன சின்னதா), கதை சொல்லுங்க சாப்பிட்டாதான் ஹெல்தி நீங்க நேரட் பண்ணி சொல்லுங்க, நல்லா சாப்பிட்டாதான் அவளுக்கு பிடிச்ச கார்ட்டூன் கேரடக்டர் யாராவது மாதிரி ஆகலாம்னு சொல்லுங்க.

தேவி ரொம்ப நாளுக்கு அப்பறம் வந்திருக்கீங்க வெல்கம் எப்படி இருக்கீங்க? நானும் இதல்லாம் தான் சொல்லவ்ந்தேன், எங்க வீட்டில் கதைல தான் காலமே ஓடுனுச்சு நீ அப்படி ஆக வேண்டாமா இப்படி ஆக வேண்டாமன்னு சொல்லியே. இப்ப கொஞ்சம் பரவாயில்ல. நிச்சயம் சங்கீதா நீங்க முயற்சி செய்து பாருங்க, பயனுள்ளதா இருக்கு தேவி

உதவிக்கு மிக்க நன்றி dear friends.முயற்சி செய்கிறேன்.

எவ்வளவோ பண்ணிட்டோம்,
இத பண்ண மாட்டோமா!

மேலும் சில பதிவுகள்