வெஜிடபிள் சமோசா

தேதி: November 14, 2006

பரிமாறும் அளவு: 6நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - ஒன்றரை கோப்பை
வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
பச்சைபட்டாணி - முக்கால் கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் - இரண்டு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
மிளகாய்தூள் - கால்தேக்கரண்டி
கரம் மசாலா - அரைதேக்கரண்டி
புதினா தூள் - அரைதேக்கரண்டி
அல்லது புதினா தழை - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு கோப்பை


 

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும்.
பச்சைபட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயைக் காயவைத்து வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து எல்லாத்தூளையும் போட்டு கிளறி, மசித்த கிழங்கு கலவையை கொட்டி கொத்தமல்லி, புதினாவை போட்டு கலக்கி விட்டு இறக்கி நன்கு ஆறவைக்கவும்.
பிறகு மைதாமாவில் உப்புத்தூள், சூடுபடுத்திய வெண்ணெய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு பிசையவும்.
பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பூரி மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக 10 - 12 உருண்டைகள் செய்து வைக்கவும்.
பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி போல் ஆனால் மெல்லியதாக தேய்த்து இரண்டாக வெட்டவும். பின்பு ஒரு அரை வட்டத்தில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி அழுத்தி ஒட்டவும்.
இதைப் போலவே எல்லா உருண்டைகளையும் செய்து வைக்கவும்.
பிறகு ஒரு குழிவான சட்டியில் எண்ணெயைக் நன்கு காய வைத்து பிறகு அடுப்பின் அனலை பாதியாக குறைத்து வைத்து சமோசாக்களை இரண்டு அல்லது மூன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பிறகு மீண்டும் அனலைக் கூட்டி பின்பு குறைத்து மேற்கூறிய முறையில் எல்லாவற்றையும் பொரித்து எடுக்கவும்.
குறைந்தது இருபது சமோசாக்களை இந்த அளவில் செய்யலாம்.
இதனுடன் இனிப்பு காரம் கலந்த புளி சட்னி அல்லது புதினா கொத்தமல்லி சட்னியை பக்க உணவாக வைத்து சூடாக பரிமாறவும்.


தயாரித்த சமோசாக்களை உடனே செய்ய தேவை இல்லையென்றால் அதை குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தியும் வைத்து பிறகு செய்யலாம். தயாரித்த பொரிக்காத சமோசாக்களை ஒரு தட்டில் பரப்பி வைத்து ஃபிரீசரில் பத்து நிமிடம் வைக்கவும். பிறகு வெளியில் எடுத்தால் ஒன்றை ஒன்று ஒட்டாமல் இறுகி இருக்கும். அதனை ஒரு பிளாஸ்டிக் கவரில் அல்லது டப்பாவில் வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து பத்து நிமிடம் வெளியில் வைத்திருந்து பொரிக்கலாம். அல்லது மற்றொரு முறையில், அவனில் 300 டிகிரி Fல் பத்து நிமிடம் வைத்து அரைவேக்காடாக வேகவைத்து நன்கு ஆறவைத்து ஃபிரீசரில் எடுத்து வைத்து பிறகு பொரிக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்