urgent please .காது ஜவ்வில் ஓட்டை

காது ஜவ்வில் ஓட்டை இருக்கிறது சிறியதாக இருக்கிறது. தானாக மூடிக்கொள்ளுமா யாருக்காவது அனுபவம் உள்ளதா பகிர்ந்து கொள்ளுங்கள்.

நேரடி அனுபவம் இல்லை. அனுபவப்பட்டவர் அருகிலேயே இருந்த அனுபவம் இருக்கு.

நீங்க செய்ய வேண்டியது உடனடியா காது மருத்துவரை பார்க்க வேண்டியதுதான். ஓட்டை சின்னதுன்னு நீங்க சொல்றதை வச்சு ஏற்கனவே மருத்துவரை பார்த்து இருக்கீங்கன்னு யூகிச்சுக்கிறேன். அப்படி பார்த்து இருந்தா அவரே உங்களுக்கு விளக்கி இருப்பார்.

காது ஜவ்வு ஓட்டை தானா மூடிக்கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கு. அப்படி மூடுதான்னு பார்க்க டாக்டர்ஸ் ஒரு குறிப்பிட்ட காலக்கெடு கொடுப்பாங்க. ஒரு மாசத்துல இருந்து மூணு மாசம் வரைக்கும் பார்ப்பாங்க. ஸ்லோவான இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சா இன்னும் கொஞ்சம் டைம் கூட பார்ப்பாங்க. அந்த பீரியட்ல ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும். மருந்து தொடர்ந்து எடுத்துக்கணும். காதில தண்ணீர் போகாம பார்த்துக்கணும். குறிப்பா செப்டிக்/ இன்பெக்சன் ஆகிடாம பார்த்துக்கணும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு எந்த முன்னேற்றமும் தெரியலேன்னா, ஆபரேசன் தான் ஒரே வழி.

Tympanoplasty/Myringoplasty surgery ன்னு நெட்டுல தேடினா வீடியோவே கிடைக்கும். காதுக்கு மேல் புறத்தில இருந்து ஒரு சிறிய அளவு சதை/டிஷ்யூ வெட்டி எடுத்து அதை வச்சு ஓட்டையை அடைப்பாங்க. இந்த ஆபரேசனை ரெண்டு விதமா செய்யலாம். ஒண்ணு, காது ஓட்டை வழியா அந்த ட்ஷ்யூவை எடுத்துப் போயி ஓட்டைய அடைக்கிறது( endaural approach ). லேப்ரோஸ்கோபி மாதிரி. இது அதிகம் பெயின் இல்லாதது. பிரச்சனைகள் இல்லாதது. ஆனா, சக்ஸஸ் ரேட் ரொம்பவே குறைவாம். ஆபரேசன் செய்யறதுலயும் பிரச்சனைகள் இருக்காம். அதனால நிறைய டாக்டர்ஸ் இதை சஜஸ்ட் பண்றது இல்லை.

இன்னொரு மெத்தர்டு, இந்த முறையிலதான் அதிக ஆபரேசன் செய்யறாங்க. காது மடலுக்கு பின்னால வெட்டி எடுத்து கிட்டத்திட்ட காதைத் திறந்து ஓட்டை அடைக்கிறது ( post-auricular approach ). அனுபவம் உள்ள டாக்டர்ஸ் பண்ணினா இதில பெரிசா பிரச்சனைகள் இருக்காது. காது மடலுக்கு பின்புறம்ங்கிறதால, தழும்பு வெளியே தெரியாது. ஆபரேசனுக்கு முன்ன காது பக்கம் உள்ள தலைமுடியை சுத்தமா வெட்டிடுவாங்க. பெண்களுக்கு இது ஒரு சிரமம், முடி வளர்ற வரைக்கும் மத்த ஏரியா முடியை வச்சு மறைச்சிக்கணும். சிலருக்கு ஆபரேசனுக்கு அப்புறம் தலைவலி பிரச்சனை இருக்குதாம். ஆபரேசன் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு கடுமையான தலைவலி பிரச்சனை இருக்கும். அதுக்கு டாப்லெட்ஸ் எல்லாம் கொடுத்துடுவாங்க. வேற பிரச்சனைகள் எதுவும் இருக்கிறதா தெரியலை. நம்ம அனுபவஸ்தர் எந்தப் பிரச்சனையும் இல்லாம நார்மலா இருக்காரு.

என் வயது 50 இருக்கும் போது காது ஓட்டை பிரச்சினை இருந்தது.எங்க டாக்டர் தொந்தரவு பண்ணாமல் இருந்தால் தானே சரியாகிவிடும்னு சொன்னார்.அப்படியே ஆகிவிட்டது.நீங்களும் கொஞம் வெயிட் பண்ணி பாருங்க சரியாயிடும்.

idhuvum kadandhu pogum.

மேலும் சில பதிவுகள்