சீரக சட்னி

தேதி: November 16, 2006

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீரகம் - 50 கிராம்
வத்தல் - 5
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - 4
நல்லெண்ணெய் - சிறிது
புளி - சிறிது


 

சீரகம், வத்தல் புளி ஆகியவற்றை மை போல் அரைத்து கொள்ளவும்.
வெங்காயம் , பூண்டை ஒன்றிரண்டாக தட்டி அதோடு உப்பு மஞ்சள் கலந்து கொள்ளவும்.
பின்னர் அனைத்தையும் ஒன்றாக கலந்து தண்ணிர் சேர்த்து வைத்து கொள்ளவும்
எண்ணெயில் கடுகு போட்டு தளித்து அரைத்தவை அனைத்தையும் போட்டு கொதிக்கவிடவும்.
கொதித்தப்பின் இறக்கிவைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதில் வத்தல் என்று செல்லி இருப்பது எந்த வத்தல் என செல்லுங்கப்பா

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*