அரிசி பருப்பு தோக்ளா

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 3 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
தயிர் - 1 கப்
வெந்நீர் - 3 கப்
பச்சை மிளகாய் - 6
சிறிய இஞ்சிதுண்டு - ஒன்று
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சமையல் சோடா - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

அரிசியையும் பருப்பையும் ஒன்றாகக் கழுவி, துணியில் பரப்பி வெயிலில் உலர்த்தி ரவை மாவு போல் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரையும் தயிரையும் சேர்த்து நன்கு கலந்து, அதில் பொடித்து வைத்துள்ள மாவினை மெதுவாகத் தூவி, நன்கு கலந்து இறுக்கமாக மூடி நன்கு ஊற வைக்கவும்.
பின்னர் அரைத்த பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு மேசைக்கரண்டி எண்ணெயையும் சமையல் சோடாவையும் கலவையில் கலந்து கொள்ளவும்.
அதனை எண்ணெய் தடவிய ஒரு பாத்திரத்தில் கொட்டி மிளகுத்தூளை அதன்மீது பரவலாகத் தூவி பதினைந்து நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
நன்கு ஆறிய பிறகு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்