கீரைப் பொரியல்(spinach)

தேதி: November 17, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பசலைக்கீரை - இரண்டு கட்டு
வெங்காயம் - ஒன்று
காய்ந்தமிளகாய் - இரண்டு
தேங்காய்ப்பூ - ஒரு கோப்பை
சீரகம் - ஒருதேக்கரண்டி
பூண்டு - இரண்டு பற்கள்
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
கடுகு - அரைதேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைதேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி


 

கீரையின் கட்டை அவிழ்க்காமல் காய் நறுக்கும் கட்டையில் வைத்து கத்தியால் மொத்தமாக கீரையின் அடிபாகத்தை நறுக்கி எடுத்து அப்புறப்படுத்திவிடவும். இதைப்போலவே இரண்டு கட்டுக்களையும் நறுக்கி அப்புறப்படுத்து விடவும்.
பிறகு கீரைகளை கட்டப்பட்டுள்ள கயிற்றை அவிழ்த்து விட்டு ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை ஊற்றி கீரைகளை மொத்தமாக போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அரித்து எடுக்கவும்.
பிறகு மீண்டும் தண்ணீரில் பிடிபிடியாக போட்டு எல்லாக்கீரைகளையும் கழுவிக் கொள்ளவும்.
குறைந்தது இரண்டு முறை இதேப் போல சுத்தம் செய்த்துக் கொள்ளவும்.
பிறகு கீரையை ஈரம் இல்லாமல் துடைத்தெடுத்து பிடிபிடியாக கட்டையில் வைத்து நொறுங்க நறுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளி வைக்கவும்.
சீரகத்தை இலேசாக வறுத்து தேங்காய்ப்பூவுடன் உப்பைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.
ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகைப்போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலைப் போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி தொடர்ந்து கீரையைக் கொட்டி கிளறி விடவும்.
தண்ணீர் சிறிதுகூட படக்கூடாது.
கீரை முக்கால் பங்கு வேகும் வரை அடிக்கடி கிளறி விடவும். பிறகு கலக்கி வைத்துள்ள தேங்காய்ப்பூவைப் போட்டு நன்கு கிளறி விட்டு இறக்கி விடவும்.
இந்த சுவையான கீரை பொரியலை வெறும் பருப்பு சோற்றோடு சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி மேடம்,இன்று உங்கள் கீரை பொரியல் செய்தேன்.பருப்பு சாதத்துடன் மிகவும் நன்றாக இருந்தது.

jeyasutha
"As is our confidence, so is our capacity"

நன்றி சுதா இந்த குறிப்பு எனக்கும் ரொம்ப பிடித்த ஒன்று.வாரம் ஒரு முறையேனும் எனது மெனுவில் இருக்கும். பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி.

அன்புள்ள மனோகரி அக்கா இன்று நான் இந்த கீரை பொரியல் செய்தேன் நன்றாக இருந்தது ரொம்ப நன்றி

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ஜூலைகா டியர், கீரைப் பொரியலும் செய்தீர்களா? உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சியே, எனக்கும் ரொம்ப பிடித்த டிஷ் இது. பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி.

அக்கா இன்று கீரை பொரியல் செய்தேன். நானும் இப்படி தான் செய்வேன். கீரைப் பொடி மட்டும் சேர்ப்பேன். நன்றி அக்கா

டியர் மனோகரி மேடம்,
இன்று இந்த கீரைபொரியல்தான் வீட்டில். என்னோட செய்முறையும் இதுதான். தாளிக்கும்போதே சீரகமும் சேர்ப்பேன். சுவை நன்றாக இருந்தது. நன்றி!

அன்புடன்,
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ