வெஜிடபுள் ரோல்

தேதி: February 6, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

உருளைக்கிழங்கு - ஒன்று
காலிஃப்ளவர் - ஒன்று (சிறியது)
பெரிய வெங்காயம் - ஒன்று
காரட் - 2
பச்சைப் பட்டாணி - 2 மேசைக்கரண்டி
பட்டர் பீன்ஸ் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சீஸ் - விருப்பத்திற்கேற்ப
கோதுமை மாவு - ஒரு கப்
உப்பு - சுவைக்கேற்ப
கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய் - தாளிக்க


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
காரட்டை துருவி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை உதிர்த்து வைக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து அரைத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். காரட், பட்டாணி, பட்டர் பீன்ஸ் மற்றும் காலிஃப்ளவரை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை வதக்கி எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் காய்கறிக் கலவையையும் சேர்த்துக் கிளறவும்.
பிறகு சீஸ் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும்.
கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து, சற்று கனமான பெரிய சப்பாத்தியாக செய்து வைக்கவும்.
சப்பாத்தியின் மீது காய்கறி கலவையை பரவலாக வைக்கவும்.
பிறகு சப்பாத்தியை ரோல் செய்து, நான்கு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, நறுக்கி வைத்த ரோல்களின் இரண்டு பக்கங்களையும் நன்றாக மூடவும். (தேவையெனில் மேலும் சிறிது சப்பாத்தி துண்டுகளை வைத்து இரண்டு பக்கத்தையும் மூடலாம்).
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயார் செய்துள்ள ரோல்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான வெஜிடபுள் ரோல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் தான் முதல் பதிவு.. அதனால் இந்த 4 ரோல்ஸும் எனக்கு தான்...

கலை

பாவி... பொல்லாத பாவி!!! இது நியாயமா? நான் வந்தா மட்டும் இதெல்லாம் செய்ய தெரிஞ்ச மாதிரியே காட்டிகிறதில்லை 3:) உங்களுக்கு இதெல்லாம் தெரியும்னே எனக்கு இப்ப தானே தெரியுது!!!

லாவி கண்ணா... சீக்கிரம் சென்னை வாங்க. மறுபடி ஒரு விசிட் அடிச்சு, சீதா வித விதமா செய்ய கற்றுகிட்டதை எல்லாம் சாப்பிடலாம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெஜிடபுள் ரோல் சூப்பர். நான் செய்து ரொம்ப‌ நாள் ஆகி விட்டது, நியாபகப்படுத்தி ஜொள்விட‌ வைத்துட்டீங்க‌..நான் நார்மலாக‌ மைதாவில் தான் செய்வேன், உங்கள் முறையில் கோதுமை சேர்த்து செய்துடறேன்..வாழ்த்துக்கள் சீதாம்மா..:)
அப்புறம் உங்க‌ வெங்காய‌ பிரியாணி மற்றும் கலப்பருப்பு சூப்பரோ சுப்பர். படம் எடுத்து வைத்து இருக்கிறேன், முகப்புத்தகத்துல‌ போடுகிறேன், இந்த‌ ரெசிப்பியில் வேற‌ ரெசிப்பிஸ் பதிவு போடறாளேன்னு தப்பா எடுத்துக்க‌ மாட்டீங்க‌ தானெ..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//இந்த‌ ரெசிப்பியில் வேற‌ ரெசிப்பிஸ் பதிவு போடறாளேன்னு தப்பா எடுத்துக்க‌ மாட்டீங்க‌ தானெ..:)// - இப்படி கேட்ட பிறகு எடுத்துக்கவே மாட்டாங்க :P எடுத்துக்கிட்டாலும் காட்டிக்கவே மாட்டாங்க. ஹஹஹா. ;) சும்மா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெஜிடபுள் ரோல் சூப்பர் அம்மா, என் குழந்தைக்கும் செய்து கொடுக்க போறேன் அம்மா, பார்க்க ரொம்ப அழகாக தெரியுதும்மா,

சீத்தாம்மா,
வெஜிடேபிள் ரோல் ரொம்ப‌ டேஸ்டி அன்ட் ஹெல்த் டிப்ஸ் மா, சூப்பர்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

சீதாமேடம் வெஜிடபிள் ரோல் பார்த்தாலே சாபிடணும் போல‌ இருக்கு:) செய்து பார்த்துட்டு போட்டோவோட‌ வாரேன்..:)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

நல்லாருக்குங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

அட பார்க்கும்போதே ஆசையா இருக்கு.எடுதது சாபபிட .சூப்பர்

Be simple be sample

கடைசி ப்லேட் அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு கலை,

முதல் பதிவுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கே உங்களுக்குத்தான் எல்லாம், எடுத்துக்கோங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

இதெல்லாம் செய்யத் தெரியும்னு எனக்கே இப்பத்தான் தெரியுது:) சீக்கிரம் சென்னை வாங்க‌, செய்து தர்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுமி,

பதிவுக்கு மிகவும் நன்றி சுமி.

நான மைதா மாவு ரொம்ப‌ உபயோகிக்க‌ மாட்டேன். கடைகளில் விற்கும் சமோசா பிடிக்கும். ஆனா வீட்டில் ட்ரை செய்ததில்லை.

ஃபேஸ்புக்கில் நீங்க‌ போட்டிருந்த‌ ஃபோட்டோஸ் பாத்தேன், ரொமப் மகிழ்ச்சியாக‌ இருந்தது, ரொம்ப‌ தாங்க்ஸ் சுமி, என்னோட‌ குறிப்பை செய்து பார்த்து, ஃபோட்டோ போட்டதுக்கு.

உண்மையைச் சொல்லணும்னா, கலப்பருப்பு குறிப்பு அனுப்பும்போது கொஞ்சம் தயக்கமாத்தான் இருந்தது, ஏன்னா அது ரொம்ப‌ எளிமையான‌ குறிப்புதானே, எல்லோருக்கும் பிடிக்குமா என்று. நீங்க‌ உங்க‌ குழந்தைக்குப் பிடிச்சிருந்ததுன்னு சொன்னதும் எனக்கு ரொமப‌ சந்தோஷம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு பாலபாரதி,

பதிவுக்கு மிகவும் நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுபி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு அருட்செல்வி,

நன்றி, அருள். சீக்கிரம் ஃபோட்டோவோட‌ வாங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஜனாதுல்,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேவதி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு முசி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

கடைசி ப்ளேட் ரொம்ப அருமை.. பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு..

வித்யா பிரவீன்குமார்... :)

looks great very easy n useful recipe...