தக்காளி மிளகு சட்னி

தேதி: November 18, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 1/2
மிளகு - 1டீஸ்பூன்
நல்லெண்ணை
கடுகு
உளுந்து
உப்பு


 

தக்காளி, வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
மிக்ஸியில் மிளகை முதலில் அரைத்துக்கொள்ளவும்.
அதனோடு தக்காளி, வெங்காயத்தை சிறிது உப்பு சேர்த்து மைய அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் விட்டு, அரைத்த விழுதைச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
எண்ணை சட்டியில் நல்லெண்ணை விட்டு கடுகு, உளுந்து தாளித்து இறக்கி வைத்துள்ள சட்னியில் சேர்ககவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

நேற்று உங்கள் தக்காளி மிளகு சட்னி செய்தேன்.நன்றாக இருந்தது. நான் வாங்கிய தக்காளி சற்று புளிப்பு தன்மை அதிகம் இருந்ததால் கொஞ்சம் புளிப்பு. மற்றபடி சட்னி அருமை. மிக்க நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!