புதினா கேஷ்யூ புலாவ்

தேதி: February 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா - ஒரு கட்டு
இஞ்சி - ஒரு விரல் நீள துண்டு
பூண்டு - 10 பல்
ஏலக்காய் - 2
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 4
பச்சரிசி - ஒரு டம்ளர் (பாசுமதி (அ) பிரியாணி அரிசி)
தேங்காய்ப் பால் - 2 1/4 டம்ளர்
முந்திரி - 50 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தக்காளி - ஒன்று (சிறியது)


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஏலக்காய், கிராம்பு, பட்டை ஆகியவற்றை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். புதினா, தக்காளியை தனியாக அரைத்து வைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி அரைத்த இஞ்சி, பூண்டு மசாலா விழுதினை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின் வடிகட்டி வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். பின் அரைத்த புதினா விழுது, முந்திரியைச் சேர்த்துத் தேங்காய் பால் ஊற்றி வேக வைக்கவும். (புதினா விழுது, முந்திரியை வறுக்க வேண்டாம்). பாதி வெந்ததும் உப்பு சேர்க்கவும். தேங்காய் பால் வற்றியதும் குக்கருக்கு மாற்றி 2 விசில் வைத்து இறக்கவும். பிரஷர் அடங்கியதும் புலாவை வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
உதிரியான புதினா கேஷ்யூ புலாவ் ரெடி. வெள்ளரி ரெய்தாவுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் புலாவ் வாசனை இங்க வருது. விருப்பபட்டியல்ல சேர்த்துட்டேன். முதல்ல வந்தது நான்தான் அதனால இது எனக்குதான்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு மஞ்சுளா,

குறிப்பு ரொம்பப் பிடிச்சிருக்கு. அவசியம் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

Super dish

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

பார்கவே பசிவருதுங உங்க கையாலே இத சமச்சி சாப்புடனும்ங அப்ப தான் அதுக்கே ருசி

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

ரொம்ப நல்ல டிஷ்... எனக்கு பிடிச்சதும் கூட. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கம கம புதினா புலாவ் செய்து பார்த்தாச்சு.சூப்பர்

Be simple be sample

மஞ்சு புதினாவை அணிவகுத்து நிற்கும் முந்திரிகள் அருமை :)
வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

super dish.... parkava romba nalla iruku.... frds enaku tamilil type pannuvathu epadinu sollunga....

குறிப்பை வெளியிட்டமைக்கு மிக்க‌ நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

முதல் வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி. அந்த‌ புலாவ் உங்களுக்கே எடுத்துக்கோங்க‌

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அனபு தோழிகளே

உங்கள் வாழ்த்திற்கும், ஊக்கத்திற்கும் மிக்க‌ நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

உஙகள் வாழ்த்திற்கும் வருகைக்கும் மிக்க‌ நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

சுவையான புலாவு. இன்னைக்கு காலையில் உடம்பு முடியாம கிச்சனில் ரொம்ப நேரம் நிக்க முடியாதுன்னு இதை தேர்வு செய்தேன். வேலை வேகமா ஆச்சு. 1 டம்லர் அரிசி தான் எனக்கு ரொம்ப குறைவா, மசாலா அதிகமா தோனுச்சுன்னு 11/2 கப்பா போட்டேன். ரொம்ப பிடிச்சுது. சுவையான குறிப்புக்கு நன்றி மஞ்சு. சாரி என்னால இன்னைக்கு ஃபோட்டோ எடுக்க முடியல, எனி வே இது போல புதினா ரைஸ் நானும் செய்வது உண்டு, உங்களுடைய முறை கொஞ்சம் வித்தியாசம், அதனால் அடுத்த முறையும் இதே போல் செய்து நிச்சயம் படம் எடுத்து போடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா